தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

மார்ச் 30 உலக இட்லி தினம் - கொண்டாட்டங்களும் விமரிசையான ஏற்பாடுகளும்

கடந்த 30-03-2015 முதல் உலக இட்லி தினம் சென்னையில் கொண்டாடப்பட்டு  வருகிறது.வருடந்தோறும் நாட்கள் தவறாமல் இட்லியைத் தான் உணவாக உண்டு வருகிறோம் ஆனால் மார்ச் 30ல்  மட்டும் ஏன் இன்ட்லி தினம் என்று கொண்டாடப்படுகிறது என்ற கேள்வி உங்களுக்கு எழுவது இயற்கை தான்.இதோ அதற்கான பதில் இதே மார்ச் 30ல் தான் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் தேசிய பாப்கான் தினம் கொண்டாடப்படுகிறது அதே போல சுவீடன் நாட்டிலும் இதே நாளில் தான் அவர்கள் நாட்டின் பாரம்பரிய உணவான அப்பம் தினம் கொண்டாடப்படுகிறது.அதைப்போல நம் நாட்டின் பாரம்பரிய உணவான இட்லியின் புகழை உலகுக்கு பறைசாற்றும் நோக்கத்தோடு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 30ஆம் தேதி உலக இட்லி தினமாக கடந்த 2015ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது.

 03-03-2017 இந்த ஆண்டு நிகழ உள்ள இட்லி தினக் கொண்டாட்டங்களில் நம் நாட்டின் பாரம்பரிய உணவின் உன்னதத்தை உலகமே திருப்பி பார்க்க செய்ய வேண்டும் என்ற நோக்கில் 29-03-2017 மார்ச் 29ஆம் நாள் மாலை 5:00 மணிக்கு சென்னை பாரி முனை ,ராஜா அண்ணாமலை மன்றத்தில் இட்லி கண்காட்சி நடைபெற உள்ளது.இந்த இட்லி கண்காட்சியில் 2,500 வகையான இட்லிக்கள் இடம்பெற உள்ளனவாம் .இது உலக சாதனை என்பதும்  குறிப்பிடத்தக்கது.

இந்த இட்லி கண்காட்சியில் திரைப்பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் கலந்துக் கொண்டு பலவகையான இட்லிகளை சுவைப்பதோடு சமையல் குறிப்புகளையும் கேட்டறியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாய்ப்பினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி நம் நாட்டு பாரம்பரிய உணவின் பெருமையை உலகறிய செய்யுமாறு  கேட்டுக்கொள்கிறோம்.

இந்த இட்லி தினக் கொண்டாட்டங்கள் குறித்த தகவலை எனது நன்பர் ஒருவர் சில தினங்களுக்கு முன் முகநூலில் பகிர்ந்து இருந்தார் உடனே அதைப்பற்றி இந்த தளத்தில் பதிவிட வேண்டும் என்று நினைத்தேன்.அதன் பின்னர் இந்த இட்லி தினம் குறித்து பல தகவல்களை தேடி எடுத்து அவற்றில் ஒரு சிலவற்றை இந்த பதிவில் மொழிபெயர்த்து வழங்கியிருக்கிறேன்.

நம் தளத்தை பொருத்தவரையில் பதிவுகளில்  கொஞ்சமாவது சமூக அக்கறையும் பொதுவுடைமை கருத்தும் நிறைந்திருக்க வேண்டும் என்பதைத் தான் விரும்புவோம்.அந்தவகையில் தற்போதைய காலகட்டத்தில் இட்லி தான் சிறந்த காலை உணவு என்பதில் மாற்றுக்கருத்தே கிடையாது ஆனால் அது தான் ஆதி தமிழனின் பாரம்பரிய உணவு என்பதை ஏற்க முடியாது.இட்லி என்றால் என்னவென்று கேட்கும் இன்றைய இளைய தலைமுறையின் ஒரு பிரிவினருக்காக அதன் பெருமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் இட்லி தினத்தை விமரிசையாக கொண்டாடும் அதே வேளையில் அதனுடைய  பயன்பாடு உன்ன உணவின்றி தவிக்கும் மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதே  எங்களது விருப்பம்.அதை ஒரு வேண்டுக்கோளாகவும் இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களின்  முன் வைக்கிறோம்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...