தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

காரைக்காலில் வெளுத்து வாங்கிய மழை

கடந்த மூன்று ஆண்டுகளில் காரைக்காலில் மார்ச் மாதத்தில் இனி மழை என்பதே கிடையாது என்பது போன்று இருந்தது.ஆனால் இன்று ஒரே நாளில் 171 மி.மீ க்கும் மேல் மழை பதிவாகி  வருகிறது.இதுவரையில் 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தான் அதிக பட்சமாக
காரைக்காலில் 227.3 மி.மீ மழை அளவு பதிவானது ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் வாரத்திலேயே திட்ட திட்ட 180 மி.மீ அளவை தாண்டிவிட்டது.இதற்கு முன்பு 2008 ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி பதிவாகிய 112.5 மி.மீ தான் 24 மணிநேரத்தில் பதிவான அதிக அளவாக இருந்தது ஆனால் இன்று வெறும் 4 மணி நேரத்தில் அந்த அளவை கடந்தது மழை.

காரைக்கால் வரலாற்றிலேயே மார்ச் மாதம் அதிகபட்சமாக ஒரு நாளில் பதிவாகிய மழை அளவில் இன்று பதிவானது தான் அதிகம்.அதே போல் இந்த 2017 ஆம் ஆண்டு இதுவரையில்  ஒரே  நாளில் பதிவாகிய மழையில் இது தான் அதிகம்.திட்ட திட்ட 17 செ.மீ அதுவும் ஒரே நாளில் அதுவும் பருவ மழை காலத்தில் அல்லாமல்.

கடந்த பத்து ஆண்டுகளில் காரைக்காலில் மார்ச் மாதம் பெய்த மழையின் அளவுகள்.

மார்ச் 2007 ----------------------> மழை பதிவாகவில்லை.
மார்ச் 2008 ----------------------> 227.3 மி.மீ .
மார்ச் 2009 ----------------------> .99.7 மி.மீ
மார்ச் 2010 ----------------------> மழை பதிவாகவில்லை.
மார்ச் 2011 ---------------------->  1.2 மி.மீ.
மார்ச் 2012 ----------------------> 14.9 மி.மீ.
மார்ச் 2013 ---------------------->  9.9 மி.மீ.
மார்ச் 2014 ----------------------> மழை பதிவாகவில்லை.
மார்ச் 2015 ----------------------> மழை பதிவாகவில்லை.
மார்ச் 2016 ----------------------> 2.0 மி.மீ .
மார்ச் 2017 ---------------------->  திட்ட திட்ட 184 மி.மீ.(04-03-2017 இதுவரையில் )






பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...