தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

04-03-2017 நாளை காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்புகள்.

03-03-2017 இன்று காரைக்கால் மற்றும் நாகப்பட்டினத்தில் குறைந்த அளவில் மழை பெய்து வருகிறது இன்று மாலை முதல் நாளை காலை 6:00 மணி வரை மழைக்கான வாய்ப்புகள் காரைக்கால் மற்றும் நாகப்பட்டினத்தில் குறைவு.

04-03-2017 நாளை காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.இந்த வாரத்தில் அதிக அளவு மழை காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாளை தான் பதிவாகும் என்பது போன்று தெரிகிறது.

04-03-2017 நாளை குறிப்பாக சொல்ல வேண்டுமானால் காரைக்கால் மாவட்டம் அம்பகரத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாகப்பட்டினம் மாவட்டம் கொல்லுமாங்குடி,மங்காநல்லூர் மற்றும் மயிலாடுதுறை பகுதிகளிலும் நல்ல மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது.திருத்துறைப்பூண்டி,நாகூர்,நாகப்பட்டினம்,திருமலைராயன் பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் ஓரளவு நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.

04-03-2017 நாளை திருவாரூர் மாவட்டம் திருவாரூர் ,மன்னார்குடி ,நன்னிலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் ஓரளவுக்கு நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.

நாளை காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நாளை  மழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

1 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...