தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

16-03-2017 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளைய மழைக்கான வாய்ப்புகள்

16-03-2017 நாளை காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புண்டு.

காரைக்கால் மாவட்டத்தை பொறுத்தவரையில் 16-03-2017 நாளை அதிகாலை அல்லது விடியற்காலை நேரத்தில் மழைக்கு வாய்ப்புண்டு அதாவது நாளை காலை 1 மணியிலிருந்து 7 மணிக்குள்  மாவட்டத்தின் சில பகுதிகளில் மழை பெய்யலாம். அதன் பின் 10 மணிக்கு பிறகு வானம் சில இடங்களில் மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் லேசான மழைக்கும் வாய்ப்புண்டு.நாளை மாலைக்கு பிறகு குறிப்பிட்டு சொல்லும்படியான மழைக்கான வாய்ப்புகள் வரக்கூடிய வாரத்தில் எதுவும் இல்லை மாறாக வரக்கூடிய வாரத்தில் வெப்பம் அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.தற்பொழுது வரை காரைக்காலில் இந்த மாதத்தில் பெய்திருக்கும் மழையின் அளவு  - 186 செ.மீ.

தற்பொழுது கேரள மாநிலத்தின் பல இடங்களில் கன மழை பெய்து வருகிறது குறிப்பாக கண்ணூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தற்பொழுது மழை பெய்துக் கொண்டு இருக்கிறது.புதுச்சேரி மாநிலத்தின் ஒரு பிராந்தியமான மாஹியிலும் தற்பொழுது கன மழை பெய்து வருகிறது.இந்த மழையானது கேரள மாநிலத்தில் அடுத்து வரக்கூடிய வாரத்திலும் தொடரும் என எதிர்பார்க்கப் படுகிறது.அதனால் கேரளாவை ஒட்டியுள்ள தமிழிக பகுதிகளில் இனி வரக்கூடிய வாரத்தில் மழைக்கு வாய்ப்புண்டு.

மற்றபடி 17-03-2017 பிறகு தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் வறட்சியான வானிலையே நிலவ வாய்ப்புள்ளது வெப்ப சலனம் காரணமாக 20-03-2017 நாகப்பட்டினம் மாவட்டத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது ஆனால் அது உறுதியில்லை.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...