தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

22-03-2017 இன்று உலக தண்ணீர் தினம் 23-03-2017 நாளை உலக வளிமண்டலவியல் தினம்

22-03-2017 இன்று உலக தண்ணீர் தினம்(World Water Day )

22-03-2017 இன்று உலக தண்ணீர் தினமாம்.அக்னி நடச்சத்திர வெயிலுக்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்பே முழுவதுமாக வறண்ட விட்ட தொண்டைக்கு தண்ணீரை நாக்கில் அளந்து பருகும் நிலைதான் தற்பொழுது தமிழம் மற்றும் புதுச்சேரியில் நிலவி வருகிறது.கோடைக்கு முன்னரே வறட்சி தலைவிரித்தாடுகிறது இந்த நிலைக்கு யாரை குற்றம் சொல்லி என்ன செய்ய ! நீரால் பயன் பெரும் நாம் அதை சேமிக்க மறந்ததே பெரும் குற்றமோ !.

எதுவாயினும் நீர்மேலாண்மை குறித்து மாநில அரசுக்கும் மழை நீர் சேகரிப்பு குறித்து மக்களுக்கும் போதிய விழுப்புணர்வை ஏற்படுத்தவே பிறந்திருக்கிறது இந்த 2017ஆம் ஆண்டு என்று சொன்னால் அது மிகையாகாது.இனி வரக்கூடிய காலங்களில் மழை நீரை சேகரிப்போம்.ஆறுகளையும் குளங்களையும் தூய்மையாக வைத்துக்கொள்வோம்.வளம் பெறுவோம்.


23-03-2017 நாளை உலக வளிமண்டலவியல் தினம் (World Meteorological Day)

23-03-2017 நாளை உலக வளிமண்டலவியல் தினம் இதை உலக வானிலை தினம் என்றும் சொல்லலாம்.மழை பொய்த்தது என்கிறோம் ஆனால் அது பொய்த்து போவதற்கு நாம் தான் காரணம் என்பதை உணர மறுக்கிறோம்.வானிலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு புவி வெப்பமயமாதலும் ஒரு முக்கிய காரணம் என்று தெரிந்தோம் அதை குறைக்க என்ன செய்வது எனபதை யாரும் சிந்தித்தப் பாடில்லை.

வளிமண்டலவியல் என்று ஒன்று இல்லையென்றால் இன்று எதிர்வுகூறுவது என்பது சாத்தியப்பட்டு இருக்காது.எங்கோ வெகுதொலைவில் இருக்கும் மேகங்களின் அசைவுகளை எண்களாக மாற்றி என் கணிப்பு முறையை அடிப்படியாக கொண்டே வளிமண்டலவியல் மூலம் எதிர்வுகூறல் சாத்தியமாகிறது.

நாளை மழை வருமா வெயில் அதிகமாக இருக்குமா எந்த அளவுக்கு இருக்கும் போன்ற அனைத்தையும் நம்மால் திட்ட திட்ட கணித்து கூற முடிகிறது என்றால் அதற்கு காரணம் வளிமண்டலவியல் தான்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...