தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

23-03-2017 புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் இனி வெப்பம் அதிகரிக்கும் .

23-03-2017 இதுவரையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களையும் ஒரு சில மேற்கு மாவட்டங்களையும் தவிர மற்ற தமிழகத்தின் உள் மாவட்டங்கள் அனைத்திலும் வெப்பம் அதிகரித்துக்கொண்டே வருகிறது.சில தினங்களுக்கு முன்பு கூட கரூர் மாவட்டத்தில் 107° F அளவு வெப்பம் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இனி வரக்கூடிய வாரத்தில் தமிழக வட கடலோர மாவட்டங்களிலும் புதுச்சேரி மாநிலத்திலும் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது குறிப்பாக 26-03-2017க்கு பிறகு அதிக பட்ச வெப்பநிலையானது  கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் 1° முதல் 3° C  செல்ஸியஸ் வரை உயரக்கூடும் அப்பொழுது காலை 11 மணியிலிருந்து மாலை 4 மணி வரை வெப்பத்தின் அளவு அதிகமாக இருக்கும்.

காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களை பொறுத்தவரையில் காலை 11 மணியிலிருந்து மாலை 4 மணிவரையில் இதுவரையில்  நிலவிய வெப்பத்தின் அளவு மெல்ல மெல்ல அதிகரிக்கும் குறிப்பாக 26-03-2017க்கு பிறகு அதிக பட்ச வெப்பநிலையானது  கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் 1° முதல் 3° C  செல்ஸியஸ் வரை உயரக்கூடும்.தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வெப்பம் அதிகரிப்பதால் ஏப்ரல் மாதத்தில் வெப்ப சலனம் ஏற்பட்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளது.

இன்று காலை 8:30 அளவில் பதிவான வெப்பத்தின் படி கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருப்பத்தூரில்  - 37.8°C  (100.4°F ) பதிவாகியுள்ளது.இதற்கு அடுத்தபடியாக கரூர் மற்றும் வேலூரில் 37.5°C (99.5°F ) வெப்பம் பதிவாகியுள்ளது.

ஊட்டி ,கொடைக்கானல் போன்ற மலை பிரதேசங்களில் கூட பகல் நேர அதிகபட்ச வெப்பநிலையானது அதிகரித்துள்ளது.

வானிலை தொடர்பான மேலும் பல தகவல்களை மீண்டும் பதிவிடுகிறேன்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...