தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

புதுச்சேரி மாநிலத்தில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டிற்கு தடை

வெறும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எரியும் பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் பாதிப்புகள் எண்ணில் அடங்காதவை.பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு குறித்து மக்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு சார்பில் பல நடவடிக்கைகள் தொடர்ந்து முன் வைக்கப்பட்டாலும் அதன் புழக்கத்தையும் பயன்பாட்டையம் கட்டுப்படுத்த யாராலும் முடியவில்லை.உபயோகப்படுத்தி தெருவில் தூக்கி எரியும் பிளாஸ்டிக் பைகள் தெரு ஓரங்களில் இருக்கும் சாக்கடைகள்,ஊர் குளங்கள் மற்றும் ஆறுகளில் மண்டி அதன் வழித்தடத்தையே மறைத்து விடுகின்றன.தேங்கி நிற்கும் தண்ணீரால் நோய் பரப்பும் கொசுக்கள் அதிகரிக்கவும் வழிவகுக்கின்றன.சில இடங்களில் பிளாஸ்டிக் பைகள் குப்பைகளுடன் கலந்த பிணைந்து  பிரித்தெடுக்க முடியாத வண்ணம் இருப்பதால் குப்பைகளை எரிக்கும் பொழுது பிளாஸ்டிக் பைகளையும் சேர்த்து எரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது அதனால் ஏற்படும் நச்சுப் புகை காற்றுடன் கலந்து காற்றை மாசுப்படுத்தி அதனை சுவாசிக்கும் மக்களுக்கு புற்று நோய் உட்பட பல வகையான நோய் தொற்றுக்களை ஏற்படுத்துகிறது. மீத்தேன் திட்டம் ஹைடிரோகார்பன் திட்டத்துக்கு எதிராக நெடுவாசலில் தொடர்ந்து போராடி வரும் நாம் பிளாஸ்டிக்கை அதிகமாக பயன்படுத்தி தமிழகம் மற்றும் புதுச்சேரியின் அனைத்து இடங்களையுமே ஒரு நெடுவாசலாகவும் காரைக்காலாகவும் மாற்றிவருகிரோம் என்பதை ஏனோ இன்னும் உணரவில்லை.பிளாஸ்டிக் பைகளினால் ஏற்படும் அபாயம் குறித்து இன்னும் நாம் உணரவில்லையா இல்லை உணராமறுக்கிறோமா என்பது நமக்கு மட்டுமே வெளிச்சம்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் புதுச்சேரி மாநிலத்தில் இந்த பிளாஸ்ட்டிக் பைகளின் பயன்பாட்டிற்கும் பாதிப்புக்கும் கொஞ்சம் கூட பஞ்சமில்லை என்றே சொல்லலாம்.

பிளாஸ்டிக்கின் பயன்பாட்டை குறைக்கும் வகையில் புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி பிளாஸ்ட்டிக் தடை சட்டத்துக்கு அரசாணை வெளியிடப்பட்டது.50 மைக்ரான் மற்றும் அதற்கு குறைவான தடிமனுள்ள பிளாஸ்டிக் பைகள் மற்றும் தட்டுகள் பயன்பாட்டிற்கு முற்றிலும் தடைவிதிக்கப்பட்டது.இன்னும் அமலுக்கு வராத இந்த சட்டத்தால் பிளாஸ்ட்டிக் பைகளினால் ஏற்படும் பாதிப்பை இன்றுவரை தடுக்க முடியவில்லை.


இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அணைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு தொழில்நுட்பம்  மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பாக ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.அதன்படி

  • வணிக நிறுவனங்கள் மற்றும் தெருவோர கடைகள் எதுவாக இருந்தாலும் இனி பெயர் குறிப்பிடாத பிளாஸ்டிக் பைகளை எக்காரணம் கொண்டும் உபயோகிக்க கூடாது.
  • கடை உரிமையாளர்கள் இனி கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகங்களில் முறைப்படி பதிவு செய்த பிளாஸ்டிக் பைகளைத்தான் நுகர்வோருக்கு வழங்க வேண்டும்.
  • பிளாஸ்டிக் பைகளை நுகர்வோருக்கு வழங்கும் கடைக்காரர்கள் ஒரு மாதத்துக்கு 4,000 ரூபாயையும் ஒருவருடத்திற்கு குறைந்த பட்சம் 48,000 ரூபாயையும் பிளாஸ்ட்டிக் கழிவு மேலாண்மை கட்டணமாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு செலுத்த வேண்டும்.
  • பிளாஸ்டிக் பைகளுக்கான கட்டணத்தை நுகர்வோரிடம் இருந்து வணிக நிறுவனங்கள் வசூலித்துக் கொள்ளலாம்.அதற்கான அறிவிப்பு பலகைகள் கடைகளில் முக்கிய இடங்களில் வைக்க வேண்டும். 
  • உள்ளாட்சி அமைப்புகளிடம் உரிமம் பெறாத பிளாஸ்டிக் பை தயாரிப்பு தொழிச்சாலைகளை உடனடியாக மூடவேண்டும்.
  • பிளாஸ்டிக் கழிவுகளை வெட்ட வெளியில் இருப்பதில்லை என்பதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
  •  பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகளை  மீறுவோர் மீது சுற்று சூழல் பாதுகாப்பு சட்டம் 1986 பிரிவு 15ன் கீழ் 5ஆண்டுகள் சிறை தண்டனையும் ருபாய் ஒருலட்சம் அபராதமும் விதிக்கப்பட வேண்டும் தவுறுவோருக்கு ரூபாய் 5,000 ஒவ்வொரு நாளும் அபராதமாக வசூலிக்கப்பட வேண்டும்.
உள்ளிட்டவை உட்பட மேலும் பல விதிமுறைகள் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...