தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் வேகமாக பரவிவரும் டெங்கு காய்ச்சல்

புதுச்சேரி முதலியார்பேட்டை நைனார்மண்டபம் இந்திராகாந்தி வீதியில் வாய்க்கால்களில் ஆங்காங்கே தேங்கி நிற்கும் கழிவு நீரால் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக கூறப்படுகிறது இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த இருவர் டெங்கு நோயால் பாதிப்புக்குள்ளாகி அரசு பொது  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளதாகவும் இதைப்போன்று  புதுச்சேரி முழுவதிலும் காய்ச்சல் ,தலைவலி என டெங்கு காய்ச்சலுக்கான  ஆரம்ப கால அறிகுறிகளுடன் மக்கள் மருத்துவ மனையை நோக்கி படையெடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

தமிழகத்திலும் சில பகுதிகளில் சமீபத்தில் பெய்த மழையால் மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்பதால் டெங்கு கொசுக்களின் பெருக்கம் அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது.இன்று சற்று முன்பு பழனியில் ஒரு சிறுமி டெங்கு காய்ச்சலால் உயிரிழந்து இருப்பதாக செய்தி பரவி வருகிறது.

பன்றிக்காய்ச்சல் பீதியே  மக்கள் மத்தியில் இருந்து இன்னும் முழுவதுமாக மறையாத நிலையில் தற்போதைய டெங்கு காய்ச்சல் விவகாரம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.


இந்த டெங்கு காய்ச்சல் எதனால் பருவுகிறது ?  அதனை எப்படி தடுப்பது ? உள்ளிட்ட விஷயங்களை அறிய http://www.karaikalindia.com/2016/10/most-common-symptoms-for-dengue-fever.html

டெங்கு காய்ச்சலுக்கான ஆரம்பகால அறிகுறிகள் :

  1. அதிக காய்ச்சல்
  2. கடுமையான தலைவலி
  3. கண்களின் பின்பகுதியில் வலி
  4. வாந்தி மற்றும் குமட்டல்
  5. தசை மற்றும் எலும்பு வலி (உடல் வலி )
  6. உடலின் சுரபிக்களில் மாற்றம் ஏற்படுவதால் தொண்டைப் புண் ,நாவில் சுவை மாற்றம் உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்பு உள்ளது .
  7. தோல் தடித்து சிவப்படைந்து சினைப்பு உண்டாதல்
  8. மிதமான குருதிப்போக்கு (பல் ஈறுகளிலிருந்து குருதி வடிதல், மூக்கிலிருந்து குருதி வடிதல், மாதவிடாய் மிகைப்பு, சிறுநீரில் குருதி போதல், குருதிப்புள்ளிகள்
டெங்கு முற்றிய நிலையில் குருதிப்போக்கு காய்ச்சல் டெங்கு அதிர்ச்சி கூட்டறிகுறி என்பன உண்டாகும்.இதனை குணப்படுத்த சரியான மருந்து இதுதான் என்று சொல்லும் அளவில் ஒன்றும் இல்லை.அதனால் டெங்கு காய்ச்சலை பொருத்தவரையில் ஒன்று ஆரம்பக்கட்டத்திலேயே சிகிச்சை பெற வேண்டும் இல்லையென்றால் டெங்கு காய்ச்சல் வராத வகையில் நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...