தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

தப்பியது தமிழ்நாடு வெப்பப்பிடியில் சிக்கித்தவிக்கும் வடநாடு

தமிழகத்தில் வெப்பம் சுட்டெரித்து வருவதாக கூறிவருகிரோம் ஆனால் தமிழகம்,தெற்கு கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களைத் தவிர மற்ற அணைத்து மாநிலங்களிலும் சராசரி அளவை விட அதிக அளவு வெப்ப நிலையே  பதிவாகியுள்ளது.

இந்திய வளிமண்டலவியல் துறை வெளியிட்டுள்ள நாட்டின் அடுத்த 4 வாரங்களுக்கான உத்தேச அதிக பட்ச வெப்பநிலை அடங்கிய தகவல்களை கொண்டு பார்க்கையில் 2017 ஏப்ரல் மாதத்தில் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அதிகபட்சமாக 32 முதல் 40° செல்ஸியஸ் அளவே அதிகபட்ச வெப்பநிலையானது நிலவும் என தெரிகிறது அதே சமயம் ஏப்ரல் 15க்கு பிறகு சேலம் நாமக்கல் திருச்சி மாவட்டங்களில் அதிக பட்ச வெப்பநிலையானது 40° செல்ஸியசையும் தாண்டி பதிவாகலாம் என தெரிகிறது.தமிழகத்தின் மேற்கு மற்றும் தென்கடலோர மாவட்டங்களில் 30 முதல் 35° செல்ஸியஸ் அளவு சராசரியாக அதிக பட்ச வெப்பநிலையானது பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயம் தற்பொழுது தமிழகம்,தெற்கு கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களைத் தவிர இதர மாநிலங்கள் அனைத்திலும் மிக கடுமையான அளவு வெப்பம் நிலவிவருகிறது இது மேலும் தொடரும் என தெரிகிறது ஏப்ரல் 15ஆம் தேதிக்கு பிறகு இந்தியாவின் வட மற்றும் மத்திய மாநிலங்கள் அனைத்திலும் கடுமையான அளவு வெப்பம் அதிகரிக்கும் என தெரிகிறது.சில இடங்களில் 110° பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏப்ரல் 2017லில் தமிழ்நாடு கடுமையான வெப்பத்தின் பிடியில் இருந்து தப்பிப் பிழைத்ததை விட ருசிகரமான விஷயம் என்னவென்றால் ஏப்ரல் இறுதிவாரத்தில் தமிழகமெங்கும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது ஆனால் இன்னும் 25 நாட்கள் உள்ளது அதை இப்பொழுதே உறுதியாக குறை முடியாது.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...