தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

வேளாங்கண்ணி ஆலயத்தை மறு உருவாக்கம் செய்ய மத்திய அரசு முடிவு

மத்திய அரசின் கலாச்சாரத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பில்க்ரிமேஜ் ரீஜுவெநேஷன் அன்ட் ஸ்பிரிச்சுவாலிட்டி ஆக்மண்டேஷன் டிரைவ் ( Pilgrimage Rejuvenation and Spirituality Augmentation Drive) PRASAD கமிட்டியின் பரிந்துரையின் படி நாட்டில் உள்ள 23 கோயில்களை மறு உருவாக்கம் செய்ய மத்திய அரசு தீர்மானித்து இருந்தது.தற்பொழுது ஜம்மு காஷ்மீர் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் அடையாளம் காணப்பட்டு உள்ள இரண்டு தர்காக்களையும் சேர்த்து மொத்தம் 25 கோயில்களையும் மறுஉருவாக்கம் செய்ய மத்திய அரசு முடிவெடுத்து இருப்பதாக மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்து உள்ளார்.

இந்த மறு உருவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ள இடங்களில் காரைக்கால் அருகேயுள்ள தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தை சார்ந்த வேளாங்கண்ணி ஆலயமும் இடம்பெற்றுள்ளது.இதன் மூலம் வேளாங்கண்ணியில் கூடியவிரைவில் மறு உருவாக்கத்துக்காக தனியாக மத்திய அரசால் நிதி ஒதுக்கப்பட்டு பல கட்ட வளர்ச்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...