தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் நீர் மேலாண்மையும் மழை நீர் சேகரிப்பும்

வற்றாத நதிகள் ஓடிய நிலமெல்லாம் இன்று வறண்டு கிடக்கும் அவலம் காரணம் கேட்டால் அண்டை மாநிலத்தின் மீது பழி யாரை குற்றம் சொல்லி என்ன செய்ய நம்மிடம்  இருக்கும் வளங்களை பாதுகாத்து நம் அடுத்த தலைமுறைக்கு கொடுக்க நம்மில் எத்தனை பேர் முயற்சி செய்து இருக்கிறோம் ? நமது வறட்சிக்கு கர்நாடகா,கேரளா,ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களை குறைக்கூறும் நமக்கு நம் மண்ணின் வளங்களை பாதுகாக்கும் கடமையும் இருக்கு என்பதனை முதலில் உணர வேண்டும்.ஆற்று மணல் தொடங்கி கிரனேடு கற்கள்  வரை நம் கண் முன்னே நடக்கும் கொள்ளைகளை இதுவரையில் பார்த்தும் பார்க்காதது போல் தானே இருக்கிறோம்.

பருவ மழை பொய்த்து போனது உண்மை தான் ஆனால் பெய்த மழையை நாம் எவ்வாறு பயன்படுத்தி இருக்கிறோம் என்பதனை ஒருமுறை எண்ணி பார்க்க வேண்டும்.காலம் கடந்து பெய்த மழையால் விவசாயம் செய்ய முடியாது ஆனால் மழை நீரை சேமித்து பயன்படுத்த முடியாது என்பது விந்தையாக உள்ளது.காரைக்கால் மாவட்டத்தில் மட்டும் 2017ஆம் ஆண்டில் இதுவரையில் திட்ட திட்ட 370 மி.மீ அளவு மழை பெய்துள்ளது ஆனால் மழை துளி துளியாய் மண்னில் துள்ளி அள்ளி வழங்கிய நீர் தற்பொழுது எங்கே ? சரி அண்டை மாநிலத்துடன் கடந்த காலத்தில் நாம் போராடி பெற்ற சில நூறு டி.எம்.சி நீரினால் உண்டான பயன் எங்கே ? நீர் திறந்து விடப்பட்டபொழுது தொழிச்சாலைகள் மற்றும் சாயப்பட்டிரை கழிவுகளை அதனுடன் கலக்கச் செய்தார்கள் தொழிச்சாலைகளின் கழிவுகளை சுமந்து சென்று வீணாய் கடலில் கலப்பதற்காகவா நாம் போராடி நீர் பெற்றோம்.நீர் மேலாண்மையில் நமது மாநிலம் எவ்வளவு பின்தங்கி இருக்கிறது என்பதற்கு இதுவே ஒரு உதாரணம்.நீர் சேமிக்க அணைகள் தமிழகத்தில் இல்லை என்று கூறுவோர் உண்டு அதற்கு அரசு சார்பில் கூறப்படும் பதில் என்ன தெரியுமா நீர் பாதையில் உயரமான மலைகள் இல்லை என்பது தான்.சரி ஆற்று நீரை சேகரிக்கத்தானே மலை வேண்டும் மழை நீரை சேகரிக்க மலையின் தேவையென்ன ?

உண்மையில் மழை நீர் சேகரிப்பு குறித்து அறியாத மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கடமை அரசுக்கு மட்டுமல்ல நம் ஒவ்வருவருக்கும் இருக்கிறது.ஒரு அதிர்ச்சியான செய்தி என்ன தெரியுமா இந்த மாத இறுதி வாரம் முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் வட கடலோர மாவட்டங்களில் மிக கடுமையான வெப்பம் நிலவ வாய்ப்பு உள்ளது என்பது தான்.நம்மிடம் தற்பொழுது இருக்கும் நீர் ஆதாரங்களைக் கொண்டு ஏப்ரல் மாதம் இறுதிவரை கூட தாக்குப்பிடிக்க முடியாது.

புதுச்சேரி மாநிலத்தின் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்கள் முழுக்க முழுக்க தமிழகத்தின் நீர் ஆதாரங்களை நம்பியே இருக்கின்றன தமிழகத்தில் வறட்சி என்றால் புதுச்சேரியில் பஞ்சம் என்று தான் அர்த்தம்.காரைக்காலில் 2017ஆம் வருடத்தில் இதுவரையில் பெய்த மழை நீரை சேமித்து வைத்து இருந்தாலே இந்த ஆண்டு கோடைக் காலத்தை மிக எளிதாக புதுச்சேரி மாநிலமே சமாளித்து இருக்க முடியும்.தமிழகத்தில் இன்னும் சில நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உண்டு என்பது போல் தான் தெரிகிறது அந்த மழை நீரை சேமிக்க நடவடிக்கைகள் எடுத்தாலே முதல் படியை தாண்டியது போலத்தான் .இந்த குறுகிய காலத்தில் அதிக அளவு மழை நீரை சேகரிக்க முடியாவிட்டாலும் இன்று நாம் எடுக்கும் முடிவு இனி வரக்கூடிய காலகட்டத்தில் வறட்சியில்லா ஒரு மாநிலத்தை உருவாக்க வழிவகுக்கும் என்பதில் மாற்றுக்கருத்தே கிடையாது.

மழை நீரை எப்படி சேகரிப்பது ? சேகரித்த நீரை எப்படி பராமரிப்பது ? என்பது குறித்து மீண்டும் ஒரு பதிவில் விரிவாக விவாதிப்போம்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...