தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

வடுவூர் பறவைகள் காப்பகம் -சில தகவல்கள்

காரைக்காலில் இருந்து திட்ட திட்ட 85 கி.மீ தொலைவில் மன்னார்குடி -தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது தான் வடுவூர் பறவைகள் காப்பகம்.தஞ்சாவூரிலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவிலும் மன்னார்குடியிலிருந்து சுமார் 17 கி.மீ தொலைவிலும் இந்த பறவைகள் காப்பகம் அமைந்துள்ளது.

1999ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தொடங்கப்பட்ட இந்த வடுவூர் பறவைகள் காப்பகத்தில் ஐரோப்பியா மற்றும் வட அமெரிக்கா கண்டங்களில் இருந்து பல அறியவகையான பறவைகள் உணவு ,உறைவிடம் மற்றும் இனப் பெருக்கத்துக்காக செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதத்தில் வடுவூருக்கு இடம்பெயர்ந்து வருகின்றன.இந்த வடுவூர் பறவைகள் காப்பகத்தில் மேட்டூர் அணையிலிருந்து சாகுபடிக்காக திறந்து விடப்படும் தண்ணீரில் சிறிதளவு சேமிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் தென்கிழக்கு பருவமழை காலங்களில் பெய்யும் மழைநீரும் சேர்ந்து பறவைகள் இங்கே எளிதாக இறங்கி ஏற வழிவகை செய்கிறது.

வடுவூர் பறவைகள் காப்பகத்திற்கு இடம்பெயர்ந்து வரும் சில அறிய வகை நீர் பறவைகளின் தொகுப்பு.


 • நத்தைக்குத்தி நாரை (Open Bill Stork )
 • உண்ணிக்கொக்கு (Cattle Egret)
 • சின்னக்கொக்கு (Little Egret)
 • கூழைக்கடா (Pelican)
 • சாம்பல் கூழைக்கடா (Gery Pelican) 
 • பாம்புத்தாரா (Darter )
 • சிறிய நீர்க்காகம் (Little Cormorant )
 • நாமக்கோழி (Common Coot )
 • சிறிய ஆலா (Little Tern )
 • குருட்டுக்கொக்கு (Pond Heron )
 • இராக்கொக்கு (Night Heron )
 • மஞ்சள் மூக்கு நாரை (Painted Stork )
 • சிவப்பு வல்லூறு (Common Kestrel )
 • சிறாள் மீன்கொத்தி (Small Blue Kingfisher )

உள்ளிட்ட 40 வகையான இனங்களைச் சார்ந்த நீர் பறவைகள் இங்கு ஆண்டு தோறும் இடம்பெயர்ந்து வருகின்றன.நவம்பர் மாதங்களில் மட்டும் இங்கு அதிகபட்சமாக 20,000 பறவைகள் இடம்பெயர்ந்து வருகின்றன.

வடுவூர் பறவைகள் காப்பகத்தில் பறவைகளை பார்வையிட சரியான நேரம்  : காலை 6:30 மணிக்கு முன்பும் - மாலை 5:30 மணிக்கு பிறகும் பறவைகளை பார்வையிட சிறந்த நேரமாக கருதப்படுகிறது.

காரைக்காலில் நிறைய பேர் இங்கு சென்று இருப்பீர்கள் என நம்புகிறேன். காரைக்காலுக்கு  மிக அருகில் இருக்கும் இந்த வடுவூர் பறவைகள் காப்பகத்தை இது வரையில் பார்த்ததில்லை என்று சொல்பவர்கள் கண்டிப்பாக ஒரு முறை நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் சென்று பார்த்துவாருங்கள்.

என்னடா இவ்வளவு பிரச்சனை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில நடந்துக்குட்டு இருக்கு இவன் என்னனா திடிர்னு பறவைகள் சரணாலயம் பத்தி எழுத்துறானேனு உங்களில் சிலருக்கு தோன்றலாம்.உண்மை என்ன வென்றால் ஜெயலலிதா மறைவிலிருந்தே  பரபரப்பான செய்திகளை எழுதி எழுதி எனக்கே கொஞ்சம் படபடப்பாயிடுச்சி சரி கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கலாமேனு தான் இந்த பதிவு.நீங்களும் ரிலாக்ஸ் பண்ணிக்கோங்க ஹைட்ரொ கார்பன் ,ஆர்.கே நகர் இடைத்தேர்தல் ,காவிரி மேலாண்மை வாரியம் ,விவசாயிகள் போராட்டம் இனி நம் தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் பதிவுகளில் பரபரப்புக்கு பஞ்சமே இருக்காது என நம்பலாம்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...