தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

காரைக்காலில் ஹைட்ரொ கார்பன் திட்டத்துக்கு அனுமதி தரமாட்டோம் - வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன்

நெடுவாசல் மற்றும் காரைக்காலில் ஹைட்ரொ கார்பன் திட்டத்துக்கு எதிராக மக்களால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி மத்திய அரசு இன்று நெடுவாசல் மற்றும் காரைக்கால் உட்பட இந்தியாவின் 31 இடங்களில் பூமிக்கு அடியில் இருந்து ஹைட்ரொ கார்பன் எடுக்க பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது.இந்நிலையில் காரைக்கால் மாவட்டத்தை சார்ந்த புதுச்சேரி மாநில வேளாண்துறை அமைச்சர் திரு ஆர்.கமலக்கண்ணன் அவர்கள் மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.காரைக்காலில் ஹைட்ரொ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று அவர் தெரிவித்து உள்ளார்.காரைக்காலில் இத்திட்டத்திற்கு அனுமதி தரமாட்டோம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும் அதுமட்டுமல்லாமல் மத்திய அரசிடம் இருந்து இன்னும் எந்த தகவலும் புதுச்சேரி அரசுக்கு வரவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...