தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

நியூட்ரினோ (Neutrino) என்றால் என்ன ?

நியூட்ரினோ குறித்த தகவல்களை தமிழில் விளக்கி தெளிவாக கூறுவது மிகவும் கடினமாக தான் உள்ளது ஆனாலும் என்னால் முடிந்த வரை முயன்றிருக்கிறேன்.நியூட்ரினோ பற்றி தெரிந்துக் கொள்ளும் முன் நாம் அணு பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும்.

அணு (Atom) என்றால் என்ன ? 
அணு என்பது ஒரு பொருளின் மிகச்சிறிய அலகுப் பொருட்கூறு ஆகும்.அதாவது பல அணுக்களின் கட்டுமானத்தை தான் ஒரு பொருள் என்கிறோம்.இன்னமும் விளக்கி சொல்ல வேண்டுமானால் ஒரு பொருளை உடைத்துக்கொண்டே போனால் கடைசியாக நம்மால் உடைக்க முடியாமல் இருக்கும் மிக சிறிய பாகம் (பொருள்) தான் அணு என்று வைத்துக் கொள்வோம் அவற்றின் அளவு என்பது ஒரு மீட்டரின்  10 பில்லியனில் ஒரு பங்காகும்.

நியூட்ரினோ (Neutrino)  என்றால் என்ன ?
மேற்கூறிய அணுக்களின் அடிப்படை துகள்களில் ஒன்று தான் இந்த நியூட்ரினோ. அணுக்கருவில் உள்ள நியூட்ரான் போல இந்த நியூட்ரினோக்களுக்கும் மின்மத்தன்மை (charge) கிடையாது.மின்காந்தபுல விசையால் (Electromagnetic Force) இந்த நியூட்ரினோக்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவது கிடையாது.கடந்த 2011ஆம் ஆண்டு இவை ஒளியை (Light) விட வேகமாக பயணம் செய்ய கூடியவை என்று கூறப்பட்டது.அதனால் ஒளியை விட வேகமாக எதுவும் பயணம் செய்ய இயலாது என்கிற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டினின் கூற்றுக்கு மாறாக இருந்தது ஆனால் 2012ஆம் ஆண்டு பல கட்ட ஆராய்ச்சிகளுக்கு பிறகு அது தவறு என்றும் அதன் வேகமானது ஒளியின் வேகத்தை ஒத்தது என மறுத்துக் கூறப்பட்டது.அதைப்போல நியூட்ரினோக்களுக்கு எடை இல்லை என முன்பு கூறப்பட்டது ஆனால் 1998ஆம் ஆண்டு நடந்த ஆய்வுக்கு பிறகு நியூட்ரினோக்களுக்கும் எடை உண்டு என கண்டுபிடிக்கப்பட்டது.

நியூட்ரினோக்கள் எங்கு இருக்கும் ? 
நியூட்ரினோக்கள் நமது அண்டம் (Universe) முழுவதும் பரவிக் கிடக்கின்றன ஏறக்குறைய நூறாயிரம் கோடி நியூட்ரினோக்கள் ஒவ்வொரு விநாடியும் நமது உடலுக்குள் புகுந்து வெளியேறிய வண்ணம் உள்ளன.சூரியனில் இருந்து மட்டுமல்லாது பல விண்மீன்களிடமிருந்தும் இவ்வணுத்துகள்கள் வெளிப்படும்.

நியூட்ரினோ ஆய்வுகத்திட்டம் என்றால் என்ன ? 
பல கோடி நியூட்ரினோக்கள் நம்மை சுற்றி கடந்து சென்றாலும் அவற்றை ஈர்த்து ஆராய்ச்சி செய்வது என்பது மிகவும் கடினம்.ஒரு கருவியின் உதவியுடன் நியூட்ரினோக்களை ஈர்த்து ஆய்வு மேற்கொள்வதுதான் இந்த நியூட்ரினோ ஆய்வகத்திட்டம்.

நியூட்ரினோ (Neutrino) குறித்த ஆய்வு அவசியமானதா ? 
அறிவியல் ஆர்வலர்களை கேட்டால் ஆம் என்று தான் கூறுவார்கள் நியூட்ரினோ ஆய்வால் அண்டம் மற்றும் சூரியன் குறித்து இதுநாள் வரையில் விழங்கப்படாத பல ரகசியங்கள் தெரியவரும். நம் பூமியின் பிறப்பு குறித்தும் அறியலாம்.காஸ்மிக் கதிர்கள் ,அண்டத்தின் தொடக்கம் உள்ளிட்ட பல விஷயங்களைப் பற்றி ஒரு தெளிவான அறிவு கிடைக்கும் என நம்பலாம்.


நியூட்ரினோ ஆய்வு மையம் என்றால் என்ன ?.அது நல்லதா கெட்டதா ?.அங்கு என்ன செய்வார்கள்  ?
நான் இந்த கேள்விகளுக்கு பதில் கூறினால் நல்ல அறிவியல் சார்ந்த விஷயங்கள் அடங்கிய  பதிவில் அரசியல் பேசியது போல் ஆகிவிடும்.மேற்கூறிய கேள்விக்கான பதில்களை வரக்கூடிய நாட்களில் வேறு ஒரு பதிவில் விரிவாக விவாதிப்போம்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...