தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

பேருந்துகளில் மதுபானங்களை கடத்தி தமிழகத்தில் விற்பனை செய்யும் பெண்கள்

தமிழகத்தில் இயங்கிக்கொண்டு இருக்கும் டாஸ்மாக்குகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கான அறிவிப்புகளை தமிழக அரசு அவ்வப்பொழுது அதிரடியாக அறிவித்து வருகிறது.இதனை பயன்படுத்திக்கொண்டு தமிழக பகுதிகளில் ஒரு சிலர் மதுபானங்களை மொத்தமாக வாங்கி கள்ளச் சந்தையில் தன விலையை உயர்த்தி  விற்று வருவதாக கூறப்படுகிறது.நகரங்களுக்கு வேலைக்கு செல்வோர் மதுபாட்டில்களை வாங்கி வந்து தங்களது கிராமங்களில் அதை இரு மடங்கு விலைக்கு விற்று கொள்ளை லாபம் ஈட்டி வருகின்றனராம்.இதனால் தமிழகத்தில் இருக்கும் டாஸ்மாக்குகளில் சில நேரங்களில் மதுபான தட்டுப்படும் ஏற்படுகிறதாம்.

புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் இருக்கும் தமிழக மக்கள் இங்கு வந்து மது அருந்தி செல்வது வாடிக்கையான ஒன்று தான்.ஆனால் கொஞ்சம் தொலைவில் உள்ள தமிழக பகுதிகளில்  உள்ளவர்களுக்கு காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை எடுத்து சென்று கொடுத்தால் பாட்டிலுக்கு இவ்வளவு என்று மொத்தமாக கணிசமான அளவு கமிஷன் கிடைக்குமாம்.புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இருந்து மதுபானங்கள் கிடத்தி செல்வது என்பது பல ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே தொடர்ச்சியாக நடந்து வரும் விஷயம் தானாம்.கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசே அதிக டாஸ்மாக்குகளை திறந்து மது பானங்களை விற்று வந்ததினால் கமிஷன் கொஞ்சம் குறைவாக கிடைத்ததாம்.இந்நிலையில் தமிழக அரசு மதுவிலக்கை முன்னிலைப் படுத்தி டாஸ்மாக்குகளின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுத்து வருவதால் மீண்டும் கமிஷன் தொகை மல மல வென உயர்ந்து உள்ளதாம்.

தமிழகத்தில் தற்பொழுது நிலவி வரும் மதுபான தட்டுப்பாட்டை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி பணம் ஈட்ட திட்டமிட்டு உள்ளனராம் காரைக்கால் மற்றும் புதுச்சேரியை சார்ந்த ஒரு சிலர்.அந்த ஒரு சிலர் யாரென்பது தான் கேள்வி ? அது நமக்கு தெரியாது ஆனால் அனைத்தும் தெரிந்தவர்களுக்கு தெரியாமலா இருக்கும்.சரி அந்த விஷயத்தை அப்படியே விட்டு விடுவோம் .தமிழகத்தில் தற்பொழுது நிலவிவரும் அரசியல் சூழ்நிலைகள் காரணமாக சோதனைச் சாவுடிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப் பட்டு உள்ளதால் மதுபானக் கிடத்தலில் பெண்களை ஈடுபடுத்தி வருகின்றனராம். இந்த செய்தி மிகவும் வேதனை தரக்கூடியதாக உள்ளது.

இதில் இன்னொரு அதிர்ச்சிக்குரிய விஷயம் என்னவென்றால் கிடத்தப்படும் மதுபாட்டில்களில் 90% பேருந்துகளில் தான் கிடத்தப்படுகின்றனவாம்.அதில் சில அரசு பேருந்துகளும் உண்டு என்பது கூடுதல் செய்தி.


செய்தி : சீர்காழி மதுவிலக்கு போலீசார் காரைக்கால் எல்லையில் உள்ள நந்தலாறு சோதனைச் சாவடியில் இன்று சோதனையில் ஈடுபட்டபொழுது தனியார் பேருந்துகளில் பயணம் செய்த காரைக்கால் திருநகரைச் சேர்ந்த இரு பெண்களிடம் இருந்து 160 மது பாட்டில்களை கைப்பற்றினராம்.அது குறித்து அந்த இரு பெண்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாம்.அந்த பெண்களின் வருங்காலம் கருதி அவர்களின் பெயரை இங்கே குறிப்பிடவில்லை.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...