தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

புதுச்சேரி கடலூர் மற்றும் சென்னையில் செயற்கை பதநீர் விற்பனை

கடந்த 10 நாட்களுக்கு மேலாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே மழை பெய்து வந்தாலும் வட கடலோர மாவட்டங்களில் பகல் நேர வெப்பநிலையானது  உயர்ந்து கொண்டே தான்    இருக்கிறது. பெப்சி,கோக்,7அப் உள்ளிட்ட நச்சுத் தன்மை நிறைந்த வெளிநாட்டு குளிர்பானங்கள் குறித்த விழிப்புணர்வு சமீப காலங்களில் பொது மக்களிடம் அதிகரித்து வருவதால் மக்கள் இயற்கை பானங்களை தேடி சென்று அருந்த விருப்புகின்றனர். அதனால் இயற்கை பானங்களின் தேவையும் அதற்கு உண்டான விலையும் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.

இந்த நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பணம் பார்க்க விரும்பும் சில விஷமிகள் வியாபாரிகள் போல வேடம் அணிந்து இயற்கை முறையில் தயாரான பானங்கள் என்று கூறி போலி பானங்களை தயார் செய்து கொள்ளை லாபம் ஈட்டி வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. அவற்றுள் ஒன்றாக தற்பொழுது போலி பதநீர் விற்பனை அமோகமாக நடந்து வருகிறதாம்.இந்த போலி பதநீரை தயார் செய்ய பிடிக்கும் நேரமும் செலவும் மிகவும் குறைவாம் அதனாலேயே இதனை  விற்பனை செய்வதில் விஷமிகளிடம் கடும் போட்டிகள் நிலவிவருகிறதாம்.

செயற்கை பதநீர் எப்படி தயார் செய்வார்கள் ? 
செயற்கை பதநீர் தயார் செய்ய சாக்கரீன் , கலர் போடி மற்றும்  தண்ணீர் போதுமானது.இவற்றைக்கொண்டு இயற்கையான பதநீர் போலவே செயற்கை பதநீரை தயார் செய்து விட முடியும்.போலி பதநீர் விற்பனை செய்வோர் அதனை தயாரிக்க அவர்கள் பயன்படுத்தும் தண்ணீர் சுகாதாரமானது தானா என்பதும் கேள்விக்குறி தான்.

செயற்கை பதநீரை அருந்துவதால் என்ன என்ன பிரச்சனைகள் வரும் ?
செயற்கை பதநீரை அருந்துவதால் ஆரம்பத்தில் வயிற்றுப் போக்கு ,வயிற்று வலி உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும்.அதனையே தொடர்ந்து பருகி வந்தால் சிறுநீரக கோளாறுகள் ,தோல் தொடர்பான வியாதிகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது .


இந்த செயற்கை பதநீர் சென்னை ,புதுச்சேரி ,கடலூரில் மட்டும் விற்கப்பட்டு வருகிறதா ? 
இல்லை, தமிழகம் முழுவதும் இதைப்போன்ற போலி பொருட்களின் விற்பனை அதிகம் தான் ஆனால் தற்பொழுது மேற்குறிய இந்த நகரங்களில் தான் போலி பதநீர் விற்பனை அதிகரித்து வருகிறது.இதை இப்பொழுதே கண்டு கொள்ளாமல் விட்டால் தமிழகம் முழுவதும் செயற்கை பதநீர் விற்பனை அதிகரித்து விடும்.


செயற்கை பதநீர் விற்பனையை எப்படி தடுப்பது ? 
இதை முற்றிலும் ஒழிக்க அரசு நினைத்தால் மட்டுமே முடியும்.மற்றபடி நாம் விழிப்புடன் இருந்து கொள்ள வேண்டியது தான்.வெளியூருக்கு பயணம் மேற்கொள்ளும் பொழுது இளநீரை வாங்கி பருகி பதநீரை தவிர்ப்பது நல்லது.

இதைப்போன்ற விஷமிகள் செய்யும் வேலைகளால் பாதிப்புக்கு உள்ளாவது பொதுமக்கள்  முட்டுமின்றி நேர்மையான பதநீர் விற்பனையாளர்களும் தான்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...