தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

மயிலாடுதுறை அருகே சீன பிளாஸ்டிக் முட்டை ஆம்பலேட் -நாகை மாவட்டத்தில் மீண்டும் பரபரப்பு

நாகை மாவட்டத்தில் சீன பிளாஸ்டிக் முட்டைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக அடுத்தடுத்து புகார்கள் வந்த வண்ணம் இருந்ததும் ஆனால் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்யும்  பொழுது அவைகள் சீன பிளாஸ்டிக் முட்டைகள் இல்லை என தெரிவந்ததும் உங்களுக்கு தெரிந்ததே சமீபத்தில் கூட நாகை மாவட்டம் சீர்காழியில் சீன பிளாஸ்ட்டிக் முட்டைகள் பயன்படுத்தி முட்டை பப்ஸுகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக ஒரு பேக்கறியின் மீது புகார் எழுந்தது அதனை அடுத்து அதிகாரிகள் அந்த பேக்கறியில் நேரில் சென்று மேற்கொண்ட ஆய்வின் பொழுது பிளாஸ்டிக் முட்டை பயன்படுத்தகப்பட்ட ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பதும் சமீபத்தில் நடந்தது.அந்த நிகழ்வு குறித்த முழு தகவலையும் விரிவாக அறிய -  https://goo.gl/hh3DH3 என்ற இடுக்கையை சொடுக்கவும் .

இதற்கும் முன்னரே நாகப்பட்டினத்தில் ஒரு கடையில் பிளாஸ்டிக் முட்டை விற்பனை செய்யப்பட்டு வருவதாக நாகை மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு தகவல் வந்ததும் அதன் பின் நடந்த ஆய்வில் அவைகள் பிளாஸ்டிக் முட்டை இல்லையென கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் மக்களுக்கு  தெளிவுப் படுத்தப்பட்டதும் பழைய கதை .அந்த நிகழ்வு குறித்த முழு தகவலையும்  பிளாஸ்டிக் முட்டைகளை எப்படி கண்டுபிடிப்பது என்பது குறித்தும் அறிய - https://goo.gl/tXy1ny என்கின்ற இடுக்கையை சொடுக்கவும்.


இந்நிலையில் இன்று நாகை மாவட்டம் மயிலாடுதுறை தாலுக்காவை சார்ந்த மாப்படுகை எனும் ஊரில் சீன பிளாஸ்டிக் முட்டையை  பயன்படுத்தி ஒரு உணவகத்தில் ஆம்பலேட் விற்பனை செய்யப்பட்டு வந்தது வாடிக்கையாளர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டது.இம்முறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்து விட்டு அமைதியாக இல்லாமல் பாதிக்கப்பட்ட நபரே அந்த உணவகத்தில் வைத்திருந்த முட்டைகளை ஆய்வு செய்து பார்த்திருக்கிறார் .அப்பொழுது பிளாஸ்டிக் முட்டைதானா  என்று கண்டுபிடிக்க இணையத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கும் சோதனைகளை செய்து பார்த்து அது பிளாஸ்டிக் முட்டை தான்  என்று தனுக்குத்தானே உறுதி செய்துக் கொண்டார் .அதன் பின்னர் அங்கிருந்த சில முட்டைகளை ஆதாரங்களாக எடுத்துக்கொண்டு நாகப்பட்டினம் சென்று புகார் அளித்துள்ளார்.அவரின் புகாரின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஒருவேளை விசாரணையின் பொழுது பிளாஸ்டிக் முட்டை பயன்படுத்தப்பட்டது உறுதிசெய்யப் பட்டால்.நாகை மாவட்டத்தில் இதுவரையில் அவ்வப்பொழுது எழுந்து வந்த பிளாஸ்டிக் முட்டை பீதிக்கு ஒரு விடை கிடைக்கும் என நம்பலாம்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...