தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

எல் நினோ (El-nino ) என்றால் என்ன ?

உலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும்  பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இந்த பெயரை நம்மில் நிறையே பேர் கேள்விப்பட்டு இருக்கிறோம். எதிர்பார்க்காத சமயத்தில் திடீர் என இயற்கை பேரழிவுகள் எங்காவது ஏற்படும்பொழுது எல் நினோ என்ற பெயர் அடிபடுவதை கண்டிப்பாக நீங்களும் கேள்விப்பட்டு இருப்பீர்கள்.2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட சென்னை வெள்ளத்தின் பொழுதும் இந்த பெயர் ஊடகங்களில் பலமுறை உச்சரிக்கப்பட்டது.

எல் நினோ (El -nino ) என்றால் என்ன ? 
எல் நீனோ (El -nino ) என்பது பசிபிக் பெருங்கடலின் கடற்பரப்பில் ஏற்படும் வெப்பநிலை மாற்றத்தை குறிக்கிறது.அதாவது குறிப்பிட்ட காலங்களுக்கு ஒரு முறை பசிபிக் கடல் பரப்பின் வெப்பநிலையானது  சராசரி வெப்பநிலையினை  விட அதிகமானதாக இருக்கும்.அந்த பசிபிக் கடல் பரப்பில் ஏற்படும் வெப்பநிலை உயர்வை தான் எல் நினோ என்று சொல்கிறார்கள்.

எல் நினோ  (El -nino ) என்ற சொல்லின் அர்த்தம் என்ன ? 
எஸ்பானிய மொழியில் எல் நினோ என்ற சொல் குழந்தை இயேசுவை குறிக்கும் வகையில் சிறுவன் என்ற பொருளை வெளிப்படுத்துகிறது.தென் அமெரிக்காவின் கரையோரப் பகுதிகளில் இயேசு பிறந்தநாள் விழாவான கிருஸ்துமஸ் விழா கொண்டாடப்படும் காலங்களில் இந்த வெப்பநிலை உயர்வு ஏற்படுவதால் இதனை எல் நீனோ என்று அழைக்கிறார்கள்.

லா நினா  (La-nina ) என்றால் என்ன ? 
பசிபிக் கடல் பரப்பில் ஏற்படும் எல் நினோவுக்கு எதிரான மாற்றங்களைத் தான் லா-நினோ என்கிறோம்.அதாவதும் பசிபிக் கடல் பரப்பில் ஏற்படும் வெப்ப நிலை குறைவைத் தான் லா - நினா என்கிறோம்.எஸ்பானிய மொழியில் லா-நினோ என்பது சிறுமி என்ற சொல்லை குறிக்கிறது.

சரி இந்த எல்-நினோ மற்றும் லா-நினாவால் இந்தியாவுக்கு என்ன ஆபத்து ?
இந்தியாவை பொருத்தவரை எல் -நினோ தென்மேற்கு பருவமழையின் போக்கை மாற்றி அமைத்து விடும் அதே சமயம் லா -நினோ வால் சரியான நேரத்தில் சரியான அளவில் மழை பெய்யக்கூடும்.இது இந்தியாவை பொறுத்தவரையில் மட்டும்தான்.லா - நினாவால் பாதிப்புக்கு உள்ளாகிய நாடுகள் பல உண்டு.


இந்த எல்-நினோ பசிபிக் கடல் பகுதிகளில் எப்பொழுதில் இருந்து ஏற்பட ஆரம்பித்தது ? 
இதுவரையில் உறுதியாக தெரியவில்லை ஆனால் சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே சில ஆண்டுகளுக்கு ஒரு முறை  இந்த எல்-நினோ  ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.யாருக்கு தெரியும் நமது  குமரிக்கண்டம் கடலில் மூழ்கிய நிகழ்வுக்கும்  கூட இந்த எல் நினோ காரணமாக இருக்கலாம்.




பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...