தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

மக்களின் நலனுக்காக அதிகாரிகள் தங்களது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் - வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன்

புதுச்சேரி கம்பன் கலையரங்கில் அரசின் பொது நிர்வாகத்துறை சார்பில் நல்லாட்சி சிறந்த நிர்வாகம் தருவது குறித்த கலந்துரையாடல் கூட்டம் இன்று நடைபெற்றது.அதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர்கள் அதிகாரிகளின் நடவடிக்கைகளில் தங்களுக்கு இருந்த அதிருப்தியை வெளிப்படுத்தும் வண்ணம் உரையாடினர்.அப்பொழுது பேசிய காரைக்கால் மாவட்டத்தை  சேர்ந்த வேளாண்துறை  அமைச்சர் கமலக்கண்ணன் . 1980 களில் புதுச்சேரி மாநிலம் நிர்வாகத்தில் சேரந்து விளங்கியது.மக்களின் தேவைகளை உடனுக்குடன் அரசு அதிகாரிகள் நிறைவேற்றினர் .ஆனால் தற்பொழுது நவீன தொழிநுட்ப வசதிகள் பெருகியுள்ள காலத்தில் திட்டங்கள் தொடர்பான கோப்புகள் பல நாட்கள் தேங்கும் நிலை உள்ளது.சிறிய மாநிலமான புதுவையில் மக்கள் தொகையை காட்டிலும் அதிகாரிகள் எண்ணிக்கை தான் கூடுதலாக உள்ளது.கோப்புகளை பரீசிலித்து நடவடிக்கை எடுக்காமல் தவிர்த்துவிடும் எண்ணத்திலேயே அதிகரிகள் செயல் படுகின்றனர்.இப்போக்கை அவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

அமைச்சர் கமலக்கண்ணன் மட்டுமல்லாது பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் ,நலத்துறை அமைச்சர் கந்தசாமி ,போக்குவரத்துத் துறை அமைச்சர் ஷாஜஹான் உள்ளிட்டோரும் அதிகாரிகளின் நடவடிக்கைகள் குறித்தும் கோப்புகளை பரிசீலிக்கும் விவகாரங்கள் குறித்தும் தங்களது அதிருப்தியை தெரிவித்தனர்.

இந்த விழாவில் தலைமை ஏற்று பேசிய முதல்வர் நாராயணசாமி மக்களின் நலனுக்காக அதிகாரிகள் சட்டத்தை மீறி செயல்பட தேவையில்லை ஆனால் சட்டத்தை வளைத்து செயல்படலாம் என கூறினார்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...