தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

நியூட்ரினோ ஆய்வு மையம் என்றால் என்ன ? அங்கே என்ன செய்வார்கள் ? ( நியூட்ரினோ (Neutrino) என்றால் என்ன ? - பகுதி - II )

இந்திய நியூட்ரினோ அறிவியர்க்கூடம் என்றால் என்ன ?
இந்தியாவில் சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட கர்நாடக மாநில பகுதியான கோலார் தங்க வயல் சுரங்கத்தில் தான் காஸ்மிக் கதிர்களில் இருந்து உருவாகும் நியூட்ரினோக்கள் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்டது.கோலார் தங்க வயல் சுரங்கம் மூடப்பட்ட பிறகு தான் நியூட்ரினோ ஆராய்ச்சியை தொடர்ந்து நடத்த வேறு இடம் தேவைப்பட்டது  அப்பொழுதுதான் Indian Neutrino Observatory ( இந்திய நியூட்ரினோ அறிவியர் ஆய்வுக்கூடம் ) சுமார் 25 ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் விஞ்ஞானிகளால் 900 கோடி ரூபாய் செலவில்  அமைக்க திட்டமிடப்பட்டது.

நியூட்ரினோ ஆய்வு மையம் எங்கு அமைய உள்ளது ? 
தமிழக பகுதியான  தேனி மாவட்டத்தை சார்ந்த பொட்டிபுரம் எனும் ஊரில்  உள்ள மேற்கு போடி மலையின் உள்ளே நடைபெற உள்ளது.

நியூட்ரினோ ஆய்வு மையம் என்றால் என்ன ? அங்கே என்ன செய்வார்கள் ? 
இந்த போடடி மலையின் உச்சியில் இருந்து உள்ளே 132 மீ. நீளம், 26 மீ. அகலம் மற்றும் 30 மீ. உயரமுள்ள குகை அமைக்கப்படும். மலையின் வெளிப்பாகத்திலிருந்து 2.1 கி.மீ. நீளமுள்ள சுரங்கப்பாதை வழியாக இக் குகையை அணுகும் வகையில், 5 ஆண்டுகளில் ஆய்வுக்கூடம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 3,000-ம் டிடெக்டர்கள், 50 கிலோ டன் இரும்பு, உலகின் பெரிய காந்தம், 3 மில்லியன் மின்னணு நடத்திகள் ஆய்வுக்கூடத்தில் இடம்பெறும். இங்கு அடிப்படை இயற்பியல் ஆராய்ச்சிதான் நடைபெறும் என்று நியூட்ரினோ அறிவியல் ஆய்வுக்கூடத் திட்ட இயக்குநர் பேராசிரியர் நாபா கே.மோண்டல்  முன்பு  ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க இந்தியாவில் வேறு எங்கும் மலைகள்  இல்லையா ?
இந்தியாவில் பல மலைகள் உண்டு ஆனால் அங்கெல்லாம் கடினமான பாறை இல்லாததால், அங்கு இத்திட்டத்தைச் செயல்படுத்த முடியவில்லை. ஊட்டி மலைப் பகுதியில் குறிப்பிட்ட இடம் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அப்பகுதி புலிகள் சரணாலயம் என்பதால், திட்டத்தைச் செயல்படுத்த வனத் துறை அனுமதி மறுத்துவிட்டது. மூன்றாவதாக மிகக் கடினமான மற்றும் உறுதியான பாறைகள் தென் தமிழகத்தில் இருப்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்தனர். விஞ்ஞானிகளின் தீவிர ஆய்வுக்குப் பின், தேனி மாவட்டம், பொட்டிப்புரம் அருகிலுள்ள மேற்கு போடி மலையைத் தேர்வு செய்தனர்.

 நியூட்ரினோ குறித்த மேலும் பல தகவலைகளை மீண்டும் விவாதிப்போம்.

 நியூட்ரினோ பற்றிய அடிப்படை தகவல்களை அறிய https://goo.gl/KtOhRq என்ற முகவரியை சொடுக்கவும்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...