தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

காரைக்கால் அருகே 2000 ஆண்டுகள் பழமையான கத்தி,பானைகள் உள்ளிட்ட பொருட்கள் கண்டுபிடிப்பு

காரைக்கால் அருகே உள்ள தமிழக பகுதியான நாகை மாவட்டம் தரங்கபாடி தாலுக்காவை சார்ந்த தில்லையாடியில் 2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கத்தி ,பானை ,உறை கிணறு உள்ளிட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.
நம் நாட்டின் சுதந்தரித்திற்காக மகாத்மா காந்தியுடன் இணைந்து அறப்போராட்டத்த்தில் ஈடுபட்ட தில்லையாடி வள்ளியம்மை என்று எல்லோராலும் வழங்கப்படும் தியாகி வள்ளியம்மை நினைவு மண்டபத்தின் பின்புறத்தில் தான் அந்த பழமையான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.

பொறையாறு டி.பி.எம்.எல் கல்லூரி மற்றும் திருச்சி ஈ.வே.ரா.பெரியார் அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை மாணவர்கள் இணைந்து நேற்று தில்லையாடி அருகே பாட கள பணியில் ஈடுபட்டு இருந்தனர்.அப்பொழுது அப்பகுதியில் புதைந்திருந்த ஏழு அடி உயரத்திலான பானை போன்ற உறை கிணறு,துருப்பிடித்த கத்தி,இறுதிச் சடங்கின் பொழுது பயன்படுத்தக் கூடிய பானை,என்னைக்கிண்ணம் உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.அதனை தொடர்ந்து செய்தியாளர்கிடம் கூறிய பேராசிரியர்கள் இந்த பொருட்கள் எல்லாம் 2000 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் உரிய ஆய்வுக்கு பிறகு அப்பொருட்கள் யாவும் தொல்லியல் துரையின் வசம் ஒப்படைக்கப் படும் என தெரிவித்துள்ளனர்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...