தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

14-03-2017 இன்று காரைக்கால் அம்மையார் குளத்தில் பெருமாள் கோயில் மாசிமக தெப்ப உத்ஸவம்

காரைக்கால் நகரப்பகுதியில் அமைந்திருக்கும் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோவிலின் மாசிமக தெப்ப உத்ஸவம் இன்று மாலை காரைக்கால் அம்மையார் குளத்தில் நடைபெற உள்ளது.அதற்காக தற்பொழுது ஆதிசேஷன் வடிவில் பிரம்மாண்ட தெப்பம் அமைக்கும் பனி மும்மரமாக நடைபெற்று வருகிறது.

ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பிரமோஸ்தவத்தின் நிறைவின் அம்மையார் குளத்தில் தெப்ப உத்ஸவம் நடைபெறும் அதே போல இந்த ஆண்டு 14-03-2017 இரவு 7 மணிக்கு தெப்ப உத்ஸவமானது காரைக்கால் அம்மையார் குளத்தில் நடைபெற உள்ளது.ஆனால் இம்முறை வழக்கமான தெப்பம் போன்று அல்லாமல்  மூலவர் ஸ்ரீ ரங்கநாதர் ஆதிசேஷன்மீது பள்ளிக்கொண்டு காட்சியளிப்பதை தெப்பத்தில் வெளிப்படுத்தும் விதமாக ஆதிசேஷன் கோலத்தில் தெப்பம் அமைக்கும் பனி நடைபெற்று வருகிறது.ஐந்து தலை நாகமும் ,நாகத்தின் உடல் பகுதி சுற்றப்பட்டு இருக்கும் வடிவில் இந்த தெப்பம் அமைக்கப்படுகிறது.20 ஆதி அகல சுற்றளவில் நீர் மட்டத்தில் இருந்து 15 அடி உயரத்தில் இந்த தெப்பம் அமைக்கப்படுகிறது.புதுமையான முறையில் அமைக்கப்படும் இந்த தெப்பத்தைக் காண காரைக்கால் அம்மையார் குளத்தில் மக்கள் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதோ கடந்த ஆண்டு  2016இல் நடைபெற்ற ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோவிலின் மாசிமக தெப்ப உத்ஸவ புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...