கடந்த சில நாட்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் பகல் நேர வெப்ப நிலையானது அதிகரித்துக் கொண்டே வருவதால் மாலை நேரங்களில் கடற்கரையை நோக்கி படையெடுக்கும் மக்கள் கூட்டத்தின் எண்ணிக்கையும் கணிசமாக அளவு அதிகரித்துவருகிறது.பிற கடலோர மாவட்டங்களைப் போல காரைக்கால் கடற்கரையிலும் மாலை நேரத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது காரைக்காலை சார்ந்த மக்கள் மட்டுமல்லாது அதை சுற்றியுள்ள நாகப்பட்டினம் ,குமபகோணம்,மயிலாடுதுறை போன்ற தமிழக பகுதிகளில் இருந்தும் தினந்தோறும் மக்கள் காரைக்கால் கடற்கரைக்கு வந்து மாலை மற்றும் இரவு நேரங்களை குடும்பத்தோடு சந்தோஷமாக செலவிட்டு செல்கின்றனர்.
சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் காரைக்கால் கடற்கரை சாலையில் சில நேரங்களில் கூட்ட நெரிசல்கள் கூட ஏற்படுகின்றன.அதற்கு முக்கிய காரணம் திருநள்ளாறுக்கு வரும் பக்தர்கள் பெருந்திரளாக மாலை நேரங்களில் இங்கு வந்து குவிவது தான்.அதேபோல ஞாயிற்று கிழமை விடுமுறை நாள் என்பதால் உள்ளூர் மக்களும் குடும்பத்துடன் கடற்கரையை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
அப்படி குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக கடற்கரையை தேடிவரும் மக்களையும் குழந்தைகளையும் மகிழ்விக்க பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன.கடற்கரை காற்றை அனுபவித்த படி சுண்டல் ,சாட் ஐட்டங்கள்,ஐஸ்கிரீம் போன்றவற்றை சுவைக்கவும் செய்யலாம்.அதே போல குழந்தைகளை மகிழ்விக்க இராட்டினம் ,ஒட்டக சவாரி ,குதிரை சவாரி மற்றும் பல்வேறு விளையாட்டு பொருட்களை விற்பனை செய்ய பல வகையான வியாபாரிகளும் காரைக்கல் கடற்கரையில் குவிந்து வருகின்றனர்.
அப்படி குழந்தைகளை மகிழ்விக்க வியாபாரிகளால் குதிரை சவாரிக்காக பயன்படுத்தப்படும் அந்த குதிரையின் நிலை தான் மிகவும் பரிதாபமாக உள்ளது.கடந்த ஒரு மாத காலமாக அதனுடைய கால்களில் ரத்தம் கசிந்துக்கொண்டே இருக்கிறது.நாளுக்குநாள் வெளியாகும் இரத்தத்தின் அளவும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.தொடர்ந்து அந்த காயத்தில் கடல் மண் புகுந்து வருவதால் அந்த காயம் பெரிதாகிக்கொண்டே வருகிறது .இதைப்பற்றியெல்லாம் அந்த வியாபாரி கண்டுக் கொண்டதாகவே தெரியவில்லை அவரிடம் அந்த காயத்துக்கு சிகிச்சை மேற்கொண்டீர்களா என்று கேட்டாலும் சரியான பதிலில்லை.அவன் ஏதோ வியாபாரி பிழைத்துக்கொண்டு போகிறான் நீ ஏன் இதைக் கேட்கிறாய் ? என்று நீங்கள் சொல்லலாம் ஆனால் அந்த குதிரையின் உண்மை நிலையை நீங்கள் நேரில் பார்த்தால் இப்படி சொல்லமாட்டீர்கள் சில சமயங்களில் அந்த காயத்தை காக்கா போன்ற பறவைகள் கொத்தி செல்கின்றன அப்பொழுது வலி தாங்க முடியாமல் அந்த குதிரை குடிக்கிறது.நமக்கு காலில் அடிபட்டால் ஏதாவது ஒரு இடத்தில் உட்கார்ந்து ஓய்வு எடுப்போம் அந்த குதிரைக்கு அதற்கும் வாய்ப்பு இல்லை.சரியான சிகிச்சையும் ஓய்வும் மட்டுமே அதனுடைய உயிரைக் காப்பாற்றும்.அந்த குதிரையை வைத்து ஒரு சவாரிக்கு 50 ,100 என வசூல் செய்யும் அந்த வியாபாரி இதனை கண்டுகொள்ளாமல் இருப்பது மனதுக்கு வேதனையளிக்கிறது.அந்த வியாபாரியை தண்டிக்க வேண்டும் என்பது எங்களது நோக்கமல்ல ஆனால் பரிதாபத்துக்குரிய தனக்கு ஏற்பட்டு இருக்கும் உடல் உபாதையை வெளியே கூட சொல்லக்கூடி முடியாத யாருக்கும் தெரியும் வண்ணம் கண்ணீர் விட்டு அழ முடியாத அந்த குதிரையின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பதே எங்களது நோக்கம்.இதோ அந்த குதிரையின் புகைப்படத்தை இந்த பதிவுடன் இணைக்கிறேன்.
இதோ அந்த குதிரை வலிப்பொருத்து வேறு வழியில்லாமல் நிற்கும் காணொளி
பரிதாப குதிரையின் இந்த நிலையினை பார்க்கும் பொழுது காரைக்காலில் மிருகநல அமைப்புகள் என்று ஏதாவது உள்ளனவா என்பதே சந்தேகமாக உள்ளது. இதற்கு உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த குதிரையின் துயர் துடைக்க வழி செய்ய வேண்டும் என்பதே எங்களின் ஒரே வேண்டுகோள்.

0 comments:
கருத்துரையிடுக