தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

ஒரு சீமைக்கருவேல மரத்துக்கு ஒரு ரூபாய்

உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து பொது இடங்களில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பனி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அரசு சார்பில் வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தனியார் நிலங்களில் ஆங்காங்கே மண்டிக் கிடைக்கும் சீமைக்கருவேல மரங்களை நில உரிமையாளர்களே தாமாக முன்வந்து அகற்றிவிடும்மாறு அறிவிப்பு வெளியிடப் பட்டது அப்படி அதை செய்ய தவறும் பட்சத்தில் அரசே சீமைக் கருவேலமரங்களை அகற்றி விட்டு அதற்கு உண்டான செலவை நில உரிமையாளர்களிடம் இருந்து இருமடங்காக வசூலித்துக்கொள்ளும்  என அறிவிக்கப்பட்டது.அப்படி அறிவித்த பிறகும் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டதாக தெரியவில்லை.என்ன தான் அரசு தொடர்ந்து முயற்சி எடுத்து வந்தாலும் மக்களின் உதவி இல்லாமல் சீமைக் கருவேல மரங்களை முற்றிலும் அழிப்பது என்பது சாத்தியமற்றது. அதுமட்டுமல்லாமல் என்னதான் முயற்சி செய்து சீமைக் கருவேலமரங்களை வெட்டி அகற்றினாலும் அதிலிருந்து விழும் விதைகளால் சில தினங்களிலேயே புதிய செடி மீண்டும் முளைக்க தொடங்கி விடுகிறது.

இந்த பிரச்சனைகள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சார்பில் ஒரு புதிய திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.அதன்படி சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணியில் மாணவர்களை ஈடுபடுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.சும்மா சொன்னா பசங்க செய்வாங்களா ? அதற்கு தான் சீமைக் கருவேல மரங்களை வேருடன் பிடுங்கி வருபவர்களுக்கு பரிசு தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது.

சீமைக் கருவேல செடியை வேருடன் பிடிங்கி வரும் மாணவர்களுக்கும் ஒரு செடிக்கு ₹ 1 ரூபாய் வீதம் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.இது குறித்து மாவட்டத்தின் அணைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.அந்த சுற்றறிக்கையின் தகவலின் படி மாணவர்கள் தங்கள் கண்ணில் படும் சீமைக் கருவேல செடிகளை வேரோடு பிடுங்கி வந்து கொடுத்தால் பள்ளி நிர்வாகம் அந்த மாணவருக்கு செடி ஒன்றுக்கு ₹1 ரூபாய் வழங்க வேண்டுமாம்.மாணவர்கள் வேருடன் பிடுங்கி வரும் செடிகளை அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் சேகரித்து வார இறுதியில் பள்ளிகளுக்கு வரும் நகராட்சி அல்லது கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளிடம் வழங்க வேண்டும் அதன்பின் அவர்களிடம் அதற்கான தொகையை பெற்று மாணவர்களிடம் வழங்க வேண்டும்.

இதை கட்டாயமாகவோ ,தினசரி வேலையாகவோ இல்லாமல் கல்வி கற்றல் செயலுடன் மாணவர்களே சீமைக் கருவேல மரங்களின் தீமையை உணர்ந்து ஈடுபாட்டுடன் செய்யும் வகையில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பக்குவமாக எடுத்துரைக்க வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...