தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

காரைக்காலில் புதுவை அரசு சார்பில் விநியோகிக்கும் குடிநீர் ஆரோக்கியமானது தானா ?

உலக சுகாதார அமைப்பான WHO மக்கள் பயன்படுத்தும் குடிநீரில் குறிப்பிட்ட  கனிமங்கள் எந்த அளவு கலந்திருக்க வேண்டும் என்று பல விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.அதே போல் தண்ணீரில் கலந்துள்ள மொத்த திடப்பொருட்களில் அளவு குறித்தும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.அதன்படி  ஒரு லிட்டர் தண்ணீரில் 1000 mg/liter மில்லி கிராமுக்கும் குறைவான அளவே திடப்பொருட்கள் இருக்க வேண்டுமாம்.இதோ அந்த அறிக்கையை இந்த பதிவில் இணைக்கிறேன் http://www.who.int/water_sanitation_health/dwq/gdwq0506.pdf


இந்நிலையில் இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில் புதுச்சேரி ஆளுநருக்கு குடிநீர் வரியை உயர்த்திய புதுச்சேரி அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு கோரிக்கை மனு அனுப்பப்பட்டு உள்ளது.அதில் காரைக்காலில் அரசு விநாயகிக்கும் தண்ணீரில் கலந்துள்ள திடப்பொருட்களின் அளவு ஒரு லிட்டருக்கு 1500 (mg/liter) மில்லி கிராமுக்கு அதிகமாக இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.

நான் மேலே இணைத்திருக்கும் அந்த WHOவின் அறிக்கையில் எந்தந்த கனிமங்கள் அதிகரித்தால் எப்பேர்ப்பட்ட பாதிப்புகள் ஏற்படும் என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது.திடப்பொருட்களின் அளவு நாம் பருகும் குடிநீரில் அதிகரித்தால் நமக்கு அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படுவதுடன் அதையே தொடர்ந்து பருகி வந்தால் சிறுநீரக பாதிப்புகள் உட்பட பல வகையான நோய்களும் ஏற்பட வாய்ப்புள்ளது.

காரைக்காலில் குடிநீரில் திடப்பொருட்கள் 1500 mg/liter இருக்கிறதா என்பதை நான் நேரடியாக சோதித்து பார்த்தது கிடையாது ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு முறை வீட்டில் குடிநீர் குழாய்கள் மூலம் வந்த குடிநீரை ஒரு வெளிநாட்டு தனியார் நிறுவன ஊழியரை அழைத்து சோதித்து பார்க்க சொன்னேன் அவர் அந்த ஆய்வுக்கு பிறகு கிடைத்த தகவல்களைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.என்னை பார்த்து இந்த நீரை குடிக்கவா பயன்படுத்துகிறீர்கள் என்றார் ? அவர் என்னை பார்த்து முகம் சுழித்துக்கொண்டே அந்த வார்தையைக் கேட்டது இன்னும் நினைவில் உள்ளது.

அரசு குடிநீருக்கான விலையை உயர்த்துவதற்கு முன் மக்களுக்கு விநாயகிக்கும் குடிநீர் சுகாதாரமானது தானா ? என்பதனை உறுதி செய்ய வேண்டும் என்பதே காரைக்கால் பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

1 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...