தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

காரைக்கால் துறைமுக நிலக்கரி இறக்குமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை நாகூரில் ரயில் மறியல் போராட்டம்

காரைக்கால் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி குறித்தும்.துறைமுகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் அந்த நிலக்கரி இறக்குமதியால் அணுபவித்து வரும் பிரச்சனைகளையும் அவர்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகளையும் தெளிவாக விவாதித்திருந்தோம்.

காரைக்கால் தனியார் துறைமுக நிலக்கரி இறக்குமதியை எதிர்த்து நாகூர் ,பனங்குடி,போலகம் உள்ளிட்ட தமிழக பகுதிகளில் தொடர்ந்து போராடி வரும் மக்கள் ஒரு சில சமூக ஆர்வலர்களுடன் இணைந்து நாளை நாகூரில் ரயில் மறியலில் ஈடுபட உள்ளதாக செய்தி வெளியாகி வருகிறது.அதற்கு ஒரு சில அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து உள்ளன.காரைக்கால் துறைமுக நிலக்கரி இறக்குமதியால் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து மேலும் அறிய  - https://goo.gl/iZjpPa

காரைக்கால் தனியார் துறைமுக நிலக்கரி இறக்குமதியால் உருவாகும் சுவாச பிரச்சனைகள் மற்றும் தோல் வியாதிகள்


செய்தி  :  காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள தனியார் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரிகளிலிருந்து வெளியாகும் துகள்கள் காற்றில் கலந்து மாசு ஏற்பட்டு துறைமுகத்தை சுற்றியுள்ள பகுதிகளான நாகூர்,வாஞ்சூர்,மேல வாஞ்சூர்,முட்டம்,திருப்பட்டினம்,போலகம்,பனங்குடி, பூதங்குடி,மேல நாகூர் ,பெருங்கடம்பனூர் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு சுவாச கோளாறு ,நுரையீரல் பிரச்சனை ,சைனஸ் பிரச்சனை,தீராத தலைவலி ஆகியவை உண்டாவதோடு குழந்தைகளும்,கர்பிணிப் பெண்களும் இதனால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் மேலும் அப்பகுதியை சுற்றியுள்ள கோயில்கள்,மசூதிகள்,கல்வி நிறுவனங்கள் ,வீடுகள்,வணிக நிறுவனங்கள் ஆகியவற்றில் கரி படிந்து மாசடைகிறது.இது குறித்தது பல முறை கோரிக்கை அனுப்பியும் தமிழக அரசு ,மத்திய அரசு மற்றும் புதுவை அரசு ஆகியவை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை அதனால் நாளை நூகூர் ரயில் நிலையம் முன்பு காரைக்கால் துறைமுகத்தின் நிலக்கரி இறக்குமதியை கண்டித்து சமூக ஆர்வலர்களால் 21-03-2017 நாளை செவ்வாய்க்கிழமை நடத்தப்படும் ரயில் மறியல் போராட்டத்துக்கு இந்திய தேசிய லீக் ஆதரவளித்து பங்கேற்க உள்ளது என் இந்திய தேசிய லீக் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் எம்.ஜி.கே.நிஜாமுதீன் ஊடகங்களுக்கு வழங்கிய செய்தி குறிப்பில் தெரிவித்து உள்ளார்.மேலும் அவர் இது குறித்த பதிவில் நாளை நடைபெற உள்ள ரயில் மறியல் போராட்டத்தில் மாணவர்களும் இளைஞர்களும் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...