தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

காரைக்காலில் குப்பைத்தொட்டிகளை அகற்றும் பணி தீவிரம்

காரைக்கால் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு ,அதன் மூலம் மூலம் வீடு வீடாக சென்று குப்பைகளை மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகள் என தரம்பிரித்து சேகரிக்கும் பனி கடந்த 5 மாதங்களாக நடைபெற்று வருகிறது.வீடு வீடாக சென்று சேகரித்த மக்கும் குப்பைகளைக் கொண்டு இயற்கை உரமும் மக்காத குப்பைகளை முறுசுழற்சியும் ஹேண்ட் இன் ஹேண்ட்ஸ என்கிற தனியார் நிறுவனம் மூலம் செய்து வருவதாக  கூறப்படுகிறது.

 இந்தத் திட்டம் அத்ரிமுகப்பட்டு ஐந்து மாதங்கள் ஆகியும் சாக்கடைகள் மற்றும் சாலைகளில் கொட்டப்படும் குப்பைகளின் அளவு குறைந்தபாடில்லை.இதனால் இந்தத் திட்டத்தை மேலும் சிறந்த முறையில் செயல்படுத்த திட்டமிடப்பட்டு கடந்த மாதம் காரைக்கால் லெமேர் வீதியில் உள்ள குப்பைத்தொட்டிகள் அனைத்தும் மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின் பேரில் அகற்றப்பட்டது.அதுமட்டுமல்லாமல் இனி சாலையில் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.இந்தத் திட்டத்தினால் ஒரு சில மாற்றங்கள் ஏற்படவே இந்த குப்பைகளை அகற்றும் திட்டத்தை மேலும் விரிவு படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

அதன்படி காரைக்கால் பெருமாள் கோயில் வீதி ,மைதீன்பள்ளி வீதி ,தெய்தா வீதி ,கைலாசநாதர் கோயில் வீதி மற்றும் கன்னடியர் வீதி உள்ளிட்ட இடங்களில் உள்ள குப்பைத் தொட்டிகள் அகற்றும் பணி காரைக்கால் சார்பு ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.மேலும் இன்னும் கூடியவிரைவில் காரைக்கால் நகராட்சிக்கு உட்பட்ட அணைத்து இடங்களிலும் குப்பைத்தொட்டிகள் அகற்றப்படும் என தெரிகிறது.

 இந்த திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை பயன்படுத்தி இனி காரைக்கால் மக்கள் அனைவரும் குப்பைகளை தெருக்களின் உள்ள குப்பைத்தொட்டிகளில் கொட்டாமல் குப்பைகளை சேகரிக்க வீடு தேடி வரும் தனியார் நிறுவன ஊழியர்களிடம் வழங்கி நமது காரைக்காலை தூய்மையான நகரமாக மாற்ற வழிவகுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அதே சமயம் ,ஹேண்ட் இன் ஹேண்ட் தனியார் நிறுவனம் குறித்த மேலும் பல தகவல்களையும்.சேகரித்து எடுத்த செல்லப்படும் குப்பைகள் எவ்வாறு மறுசுழற்சி செய்யப்படுகின்றன என்கிற மாதிரி செயல் முறைகளையும் மக்களுக்கு தெளிவுபடுத்தினால் இந்த திட்டம் இன்னும் சிறப்பானதாக இருக்கும்  என்பதில் மாற்றுக்கருத்தே கிடையாது.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...