தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

காரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் -பொதுமக்கள் கலந்தாய்வு கூட்டம்

காரைக்கால் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஹேண்ட் இன் ஹேண்ட் தனியார் நிறுவனத்தின் மூலம் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று குப்பைகளை மக்கும்குப்பைகள்  மக்காதகுப்பைகள்  என தரம் பிரித்து சேகரித்து அதை மறு சுழற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.இத்திட்டம் கடந்த ஆண்டு 2016 நவம்பர் மாதத்தில் இருந்து காரைக்கால் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இனிதே செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டம்  காரைக்கால் மக்களுக்கு பயன்தரக் கூடிய ஒன்றாக  இருந்தாலும் இதன் விளைவாக காரைக்கால் நகராட்சி எதிர்பார்த்த மாற்றம் 100% ஏற்பட்டுள்ளதா என்றால் அதற்கு விடை கேள்விக்குறி தான்.

எப்பேர்ப்பட்ட திட்டங்கள் கொண்டு வந்தாலும் மக்களின் ஒத்துழைப்பு இன்றி எதுவுமே சாத்தியமில்லை என்பது உண்மை தானே ? ஆகையால் நாளை ஏப்ரல் முதல் நாள் 01-04-2017 சனிக்கிழமை இத்திட்டம் குறித்த பொதுமக்கள் கலந்தாய்வு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.காலை 10:30 மணிக்கு காமராஜர் சாலையில் உள்ள நந்தா ஹோட்டலில் நடக்க உள்ள இக்கலந்தாய்வு கூட்டத்தில் போதும்மக்கள் கலந்துகொண்டு தங்களுது ஆலோசனைகளை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது நான் எதிர்பார்த்தது தான் பொதுமக்களிடம் ஆலோசனை கேட்டு செய்தால் மட்டுமே இது போன்ற மக்கள் நலத் திட்டங்களால் அரசு எதிர்பார்த்த 100% சதவிகித இலக்கை எட்ட முடியும்.ஆனால் இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்துக் கொள்ள முடியாத சூழலில் நான் இருக்கிறேன்.ஆம் நான் இப்பொழுது வெளியூர் பயணத்தில் உள்ளேன் என்னிடமும்  பல  கேள்விகள் உண்டு ஆனால் அதை முன்வைக்க எனக்கு இதைப் போன்ற ஒரு சந்தர்ப்பம் இனி வாய்க்குமா என்று தெரியவில்லை. இதைப்போன்ற பொதுமக்கள் பங்குபெறும் கலந்தாய்வு கூட்டங்கள் குறிப்பிட்ட காலங்களுக்கு ஒருமுறை தொடர்ந்து நடத்தப்பட்டால் இன்னும் பயன்தரக் கூடியாதாக இருக்கும்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...