காரைக்கால் கடற்கரையில் தேசிய அளவிலான கடற்கரை கைப்பந்து (Beach Volleyball ) போட்டிகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது.இந்திய கைப்பந்து சம்மேளனம் மற்றும் பாண்டிச்சேரி கைப்பந்து சங்கம் அனுமதியுடன் நெடுங்காடு ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் அர்ஜுனா ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 17-வது தேசிய கடற்கரை கைப்பந்து போட்டியானது 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17ஆம் தேதி 17-03-2017 இன்று காரைக்காலில் நடைபெற்று வருகிறது.
காரைக்காலில் நடைபெற்றுவரும் இந்த தேசிய அளவிலான கடற்கரை கைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் இந்தியாவின் 17 மாநிலங்களை சேர்ந்த 32 அணிகளும் பெண்கள் பிரிவில் 11 மாநிலங்களை சேர்ந்த 20 அணிகளும் கலந்துகொள்கின்றன.
தற்பொழுது தமிழக அணிக்கும் தெலுங்கானா அணிக்கும் இடையேயான கடற்கரை கைப்பந்து போட்டி காரைக்கால் கடற்கரையில் நடைபெற்று வருகிறது.
நாக் அவுட் முறையில் மின்னொளியில் காரைக்கால் கடற்கரையில் நடைபெறும் இந்த தேசிய அளவிலான போட்டிகள் வருகின்ற 19ஆம் (19-03-2017) தேதி அதாவது நாளை மறுநாளுடன் நிறைவடைகிறது.
இதோ தற்பொழுது காரைக்காலில் நடைபெற்றுவரும் தேசிய கடற்கரை கைப்பந்து போட்டி 2017 புகைப்படங்கள்.
புகைப்பட உதவி : ராஜ்குமார்.ரா
காரைக்காலில் உள்ள விளையாட்டு பிரியர்கள் அனைவரும் காரைக்கால் கடற்கரையில் நடைபெற்றுவரும் இந்த தேசிய அளவிலான போட்டியை நேரில் சென்று பார்த்து வீரர்களை உற்ச்சாகப்படுத்துமாறு இந்த பதிவின் மூலம் கேட்டுக்கொள்கிறோம்.

0 comments:
கருத்துரையிடுக