தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

தனியார் வசமாகும் புதுச்சேரி மாநிலம்

இது என்னடா புது கதையா இருக்கு இந்திய அரசாங்கம் புதுச்சேரி மாநிலத்தை தனியாரிடம் தாரைவார்க்கப் போகிறதா ? என்று யாரும் அதிர்ச்சியடைய வேண்டாம்.இந்திய அரசாங்கம் தான் புதுச்சேரியை தனியாருக்கு தாரைவார்க்க வேண்டுமா என்ன ? இப்பொழுது புதுச்சேரி மாநிலத்தில் இருக்கும் உண்மை நிலை என்ன தெரியுமா எங்கும் எதிலும் தனியார் மயம் தான்.இன்னுமா புரியவில்லை அரசு துறையில் லாபம் தரக்கூடிய அனைத்து வேலைகளும் டெண்டர் முறையில் தனியாருக்கு தாரைவார்க்கப் படுகிறது.அந்த டெண்டர் வழங்கும் முறையிலும் சரியான விதிமுறைகளை கடைப்பிடப்பது கிடையாது சில இடங்களில் பணம் விளையாடுகிறது சில இடங்களில் அதிகாரம் பேசுகிறது அதனால் அரசுக்கு மிகப்பெரிய அளவில் நஷ்டம் ஏற்படுகிறது அதாவது மக்களின் வரிப்பணத்தால் நிறைந்திருக்கு அரசு கஜானாவில் பணம் கொஞ்சம் கொஞ்சமாக காலியாகிறது.இப்பொழுது தான் ஒரு புதிய பிரச்னை எழுகிறது அது என்னவென்றால் புதுச்சேரி அரசிடம் போதிய நிதி இல்லை என்று .அது எப்படி இருக்கும்  லாபத்தை எல்லாம் ஏதோ  ஒரு தனியாருக்கு தாரைவார்த்து விட்டு அந்த லாபத்தில் ஒரு பங்கை தாரைவார்த்தவர்களும் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஒரு சிலர் இருக்கும் வரை நிதி பற்றாக்குறை என்று ஒன்று ஏற்படாமல் இருந்தால் தானே ஆச்சர்யம்.

புதுச்சேரியில் இயங்கும் அரசு நிறுவனங்களை விட அரசு நிதியில் இயங்கும் நிறுவனங்கள்தான் அதிகம்.பெரும்பாலான நிறுவனங்களில் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க ஒரு தனியார் நிறுவனத்துக்கு குத்தகை வழங்கப்படுகிறது அதாவது தன் மாநில மக்களுக்கு ஊதியம் வழங்க மக்களின் வரிப்பணத்தில் நிறைந்த கஜானாவில் இருந்து பணத்தை எடுத்து ஒரு தனியாரிடம் வழங்கப்படுகிறது.அந்த தனியார் நிறுவனம் மென்று தின்றது போக மீதியை மக்களுக்கு வழங்குவான்.அந்த மீதியிலும் சேவை வரி என்ற பெயரில் கால்வாசியை பிடுங்க காத்துகொண்டு இருக்கும் அரசாங்கம் இதை போன்ற தனியார் இடைத்தரகர்களை நியமிப்பதால் நியமிப்பவர்களுக்கு எவ்வளவு லாபம் என்பது  அவர்களுக்கு மட்டுமே வெளிச்சம்.

அந்த குத்தகை காரனுக்கு மாதம் மாதம் வழங்க நிதியிருக்கும் ஆனால் நேரடியாக அரசு சில அரசு உதவிபெறும் நிறுவங்களுக்கு வழங்க வேண்டிய தொகையை தர வேண்டிய கட்டாயம் ஏற்படும்பொழுது தான் நிதி பற்றாக்குறை என்ற பேச்சு வரும் .13 மாத சம்பள பாக்கியை கேட்டு சில தினங்களுக்கு முன்பு கூட அரசு உதவி பெரும் நிறுவனத்தை சார்ந்த ஊழியர்கள் சட்டசபையின் அருகே போராட்டத்தில் ஈடுபட்டதாக செய்தி.

இப்படி லாபத்தை எல்லாம் தனியாருக்கு கொடுத்து விட்டு மக்கள் நல  திட்டங்களை நிறைவேற்ற நிதி தேடி எங்கோ ஓடுவதும்.முந்தைய ஆட்சி மீது பழி போடுவதும் ஆண்டாண்டாக இங்கே நடக்கின்ற ஒன்றுதான்.

பருவ மழை சரியான நேரத்தில் பொழியாததால் பஞ்சம் என்கிறார்கள் அதை ஏதோ ஒற்றுக்கொள்ளலாம் .சரியான நேரத்தில் மழை பெய்ய வில்லை அதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஆனால் காலம் தாழ்ந்து பெய்த மழையால் தண்ணீர் தட்டுப்பாடு எப்படி ஏற்படும் அப்படியானால் சரியான நீர் மேலாண்மை திட்டங்களை  மாநிலத்தில் அறிமுகப்படுத்தவில்லை என்று தானே அர்த்தம்.இயற்கையின் மீது பழிபோட்டு என்னாவது நம்மிடம் இருக்கும் வளங்களை பாதுகாக்க தவறிவிட்டோமே.இந்த விஷயத்தில் அரசை மட்டும் தனியாக குற்றம் சொல்ல முடியாது.

இன்னுமும் எழுதுவேன் என்னிடம் நிறைய கேள்விகள் உள்ளது ஆனால் பதில் வராது என தெரிந்த பின்னரும் கேள்விகளை அள்ளித் தொடுத்து நாம் காண போகும்  பயன் என்ன ? மக்கள் எழுந்து கேட்காத வரை இங்கு எதுவும் மாறப்போவது கிடையாது அதே போல மக்கள் எழுந்து கேள்வி கேட்டால் இங்கு மாறாமல் இருக்கப்போவது என்று எதுவும் கிடையாது.

குறிப்பு : நான் ஏதோ தற்பொழுது ஆட்சியில் உள்ளவர்களை குறை சொல்கிறேன் என்று யாரும் என்ன வேண்டாம்.நான் கூறிய விஷயங்கள் எல்லாம் புதுச்சேரி மாநிலத்தில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே  வழி வழியாக பின்பற்றப்பட்டு வந்த விஷயங்கள்.இது இனியாவது மாற வேண்டும் என்பதே எங்களைப் போன்ற சாதாரண மக்களின் விருப்பம்.


செய்தி : புதுச்சேரியில் வரி கொடா இயக்கம் எனும் அமைப்பை நடத்திவருபவரும் அரசு துறையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவருமான 53 வயதாகிய வைத்திக்குப்பத்தை சேர்ந்த விஜய வெங்கடேசன் என்பவர் மக்கள் நல திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் அரசுக்கு வருவாய்  தரக்கூடிய விஷயங்கள் அனைத்தையும் தனியாருக்கு தாரைவார்த்த அரசுக்கு எதற்கு வரி செலுத்த வேண்டும் என்று தனி மனிதனாக ஒரு போராட்டத்தை முன்னெடுத்து நேற்று நடத்தி இருக்கிறார்.பல்வேறு காலங்களில் சுயநலமின்றி மக்கள் நலனுக்காக வீதியில் இறங்கி போராடிய பல முக்கிய போராளிகளை சரியான தருணத்தில் நாம் கண்டுகொள்ள தவிறியிருக்கிறோம் அதற்கான பாவத்தை தான் நாம் இன்னும் அனுபவித்திக் கொண்டு இருக்கிறோம்.பொது நலனுக்காக போராடுபவர்களுக்கு தோல் கொடுப்பது நமது கடமை என உணர்ந்தால் மட்டுமே நமது அடுத்த தலைமுறை அந்த பாவத்தில் இருந்து தப்பிப்பிழைக்கும்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...