தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

பலா பழம் தெரிந்திருக்கும் பாலா பழம் உங்களுக்கு தெரியுமா ?

என்னது பாலா பழமா இதுவரை நாங்கள் கேள்விப்பட்டதே இல்லை என்கிறீர்களா.உண்மைதான் இன்றைய தலைமுறையினர் பலருக்கும் இதைப்போன்ற ஒரு பழ வகை இருப்பது தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.உலகின் ஒரு சில வெப்பம் அதிகமாக உள்ள பகுதிகளில் மட்டுமே வளரக்கூடிய  இந்த பாலா மரம் நம் தமிழகத்திலும் வளரக்கூடியது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ?

 உங்களது வீட்டில் உலக்கை இருகிறதா ? இப்பொழுது என் உலக்கையை பற்றி கேட்கிறேன் என்கிறீர்களா ? காரணம் உண்டு அக்காலத்தில் உலக்கை செய்வதற்கே பெரும்பாலும் இந்த பாலா மரம் பயன் படுத்தப்பட்டது.பூக்கும் வகை தாவரமான இந்த பாலா மரத்தில் 120 வகை உள்ளது.இவை இந்தியா ,மலேசியா மற்றும் ஆஸ்தரலியா போன்ற நாடுகளை மட்டுமே அதிகம் காணப்படுகின்றன அதுமட்டுமல்லாமல் பசிபிக் கடலில் உள்ள சில தீவுகளிலும் இவ்வகை மரங்கள் காணப்படுகின்றன.

செய்தி  : நாகை மாவட்டத்தில் உள்ள கோடியக்கரை வனப் பகுதியில் இந்த பாலா மரங்கள் அதிகமாக காணப்படுகின்றன.இதற்கு முக்கிய காரணம் அது அமைந்திருக்கும் இடம் தான் கடற்கரையோரம் மூன்று திசைகளிலும் கடல் சூழ வெப்ப மண்டல எல்லைக்கோட்டில் அது அமைந்துள்ளது. அதனாலேயே இந்த கோடியக்கரை வனப்பகுதியில் சில அறிய வகை தாவரங்கள் அதிகமாக காணப்படுகின்றன.பருவமழை பொய்த்து வெப்பம் அதிகரித்திருக்கும் இவ்வேளையில் கோடியக்கரை வனப்பகுதியில் முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் அதிக அளவில் பாலா மரங்கள் பூத்து குலுங்குகின்றன.நித்தம் பழுக்காது பாலா என்று ஒரு பழமொழியும் உண்டு பாலா பழம் பழுப்பது அவ்வளவு அரிதானது.ஆனால் தற்பொழுது கோடியக்கரை பகுதியில் பாலா பழங்கள் அதிக அளவில் பழுத்து காணப்படுகின்றன.இனிப்பு சுவை உடைய இந்த பாலா பழம் தற்பொழுது அங்கு உள்ள குரங்குகளுக்கும் பறவைகளுக்கும் சிறந்த சுவைமிக்க  உணவாக மாறியுள்ளது .


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...