தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

நாகப்பட்டினம் கச்சா எண்ணெய் கிணறுகள் -வயல்களில் குழாய்கள் பதிக்கும் பனி தீவிரம்

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் நிலத்தடியில் பெட்ரோலிய கனிமங்கள் இருப்பதாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அதன் பிறகு நாகை மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் இலுப்பூர் போன்ற இன்னும் பல இடங்களில் எண்ணெய் கிணறுகள் அமைக்க தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.அதைத் தொடர்ந்து நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த ஓர்குடி,கடம்பங்குடி மற்றும் சீர்காழி,கொள்ளிடம்.குத்தாலம் போன்ற பகுதியில் எண்ணெய் கிணறு அமைக்கும் பனி நடைபெற்றுவருகிறது.

காரைக்கால் மாவட்ட எல்லை மற்றும் நாகூருக்கு மிக அருகே அமைந்து இருக்கும் நரிமணம் பனங்குடி பகுதியில் சி.பி.சி.எல் (CPCL) எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் உள்ளது.காவிரி படுகை திட்டத்தின் கீழ் டெல்டா மாவட்டங்களில் அமைந்திருக்கும் பல்வேறு எண்ணெய் கிணறுகளில் இருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெய் ஆனது குழாய்கள் மூலம் பனங்குடி  CPCL க்கு அனுப்பப்படுகிறது.இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2012ஆம் நிலத்துக்கு ஐந்தடி ஆழத்தில் புதைக்கப்பட்ட குழாய்களில் பழுது ஏற்பட்டு கச்சா எண்ணெய் கழிவுகள் விவசாய நிலங்களில் தேங்க ஆரம்பித்தன.இதை தொடர்ந்து இந்த நிகழ்வுக்கு திருவாரூர் மாவட்ட விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் அந்த குழாய்களை புதுப்பிக்கும் பனி தற்பொழுது நடைபெற்று வருகிறது.

தற்பொழுது நெடுவாசலில் ஹைட்ரொ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பாக தொடர் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் இந்த திடீர் புதிய குழாய்கள் பதிப்பு விவகாரம் நாகை ,திருவாரூர் மற்றும் காரைக்கால் மாவட்ட மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது மீத்தேன் திட்டமா புதிய கச்சா எண்னெய் கிணறு திட்டமா அல்லது ஹைட்ரொ கார்பன் திட்டமா என என்னவென்று தெரியாமல் குழம்பி வருகின்றனர்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...