தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

நாகை மாவட்டத்தில் தொடரும் பிளாஸ்டிக் முட்டை பீதி

பிளாஸ்டிக் முட்டை குறித்த பீதி தமிழகம் முழுவதும் பல நகரங்களில் அவ்வப்பொழுது எழுந்தாலும் நாகை மாவட்டத்தை பொறுத்தவரையில் பிளாஸ்டிக் முட்டை குறித்த பீதி தொடர்கதையாகவே ஆகிவிட்டது.இதற்கு முன்னரே சில முறை நாகப்பட்டினத்தில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் முட்டை விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்ததும் அதன் பின் உணவு பாதுகாப்புக்கு அதிகாரிகளால் குறிப்பிட்ட கடைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அது பிளாஸ்டிக் முட்டை இல்லை என்று தெரியவந்ததும் நீங்கள் அறிந்ததே.அந்த நிகழ்வு குறித்த விரிவான தகவலுக்கு இங்கே சொடுக்கவும் http://www.karaikalindia.com/2017/01/how-to-differentiate-plastic-eggs-with-normal-eggs.html

இந்நிலையில் நேற்று நாகை மாவட்டம் சீர்காழியில் பிளாஸ்டிக் முட்டையால் செய்யப்பட்ட பப்ஸுகள் ஒரு பேக்கரியில் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனை அடுத்து அந்த பேக்கரிக்கு விரைந்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் அது வெறும் வதந்தி என தெரியவந்தது.பின்னர் தரமான முட்டைகளை கொண்டே முட்டை பப்ஸுகள் தயாரிக்க வேண்டும் என்று அந்த பேக்கரியின் ஊழியர்களுக்கு அறிவுரைகள் வழங்கி விட்டு திரும்பியிருக்கின்றனர் உணவு பாதுகாப்பு அதிகாரிகள்.

நாகை மாவட்டத்தில் இப்படி தொடர்ந்து எழும் பிளாஸ்டிக் முட்டை பீதிக்கு காரணம் என்னவாக இருக்கும் ?  என்ற கேள்விக்கு  எப்படி யோசித்தாலும் கிடைக்கும் பதில் இன்னொரு கேள்விதான் அது  " நெருப்பு இல்லாமல் புகையுமா என்ன ? " என்பதுதான் .


 பிளாஸ்டிக் முட்டையை கண்டறியும் முறை 

நீங்கள் வாங்கியிருப்பது பிளாஸ்டிக் முட்டை என்று உங்களுக்கு தோன்றினால்

  • முட்டையை உடைக்காமல் முழு முட்டையை துணியில் வைத்து நன்கு உரச வேண்டும் பின்னர் சிறு துண்டு காகிதங்களுக்கு அருகில் கொண்டு சென்றால் பிளாஸ்டிக்கில் உராய்வு ஏற்பட்டு தூண்டப்பட்ட  மின்சக்தியால் அந்த காகிதம் முட்டை ஓட்டில் ஒட்டிக்கொள்ளும். 
  • முட்டையை சரிபாதியாக உடைத்த பின்னர் அடிப்பாகம் அகன்ற பகுதியின் உட்பகுதியில் காற்றால் உப்பிய பகுதி பிளாஸ்டிக் முட்டையில் காணப்படாது.
  • முட்டையின் உட்புறம் உள்ள ஜவ்வு போன்ற பகுதியை கவனமாக பிரித்து வைக்க வேண்டும்.அந்த முட்டை பிளாஸ்டிக்காக இருந்தால் சிறிது நேரத்தில் அந்த ஜவ்வு போன்ற பகுதி கடினத்தன்மை அடைந்துவிடும்.
  • முட்டையை உடைத்து உள்ளே உள்ள மஞ்சள் மற்றும் வெள்ளைக்கருவை ஊற்றினால் அது நல்ல முட்டையாக இருந்தால் கரு தனித்தனியே தெளிவாக இருக்கும்.

மேற்குறிய விஷயங்களை முயற்சி செய்து பார்த்தல் அது நல்ல முட்டையா அல்லது பிளாஸ்டிக் முட்டையா என்பதனை எளிதில் கண்டுபிடித்து விடலாம்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...