தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

பூம்புகாரின் இன்றைய அவல நிலை (குப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் -பகுதி III )

குப்பைகளால் நாசமாகும் சுற்றுலா தளங்கள் என்ற தலைப்பின் கீழ் காரைக்கால் கடற்கரையில்  மனிதர்களாகிய நாம் நமது சில நிமிட இன்பத்துக்காகவும் குப்பைகளை குப்பைத் தொட்டியை  தேடிச்சென்று போட மறுக்கும் எண்ணத்தாலும் ஏற்படுத்திய சீரழிவுகளை இதற்கு முந்தைய இரண்டு பதிவுகளில் பார்த்தோம்.தற்பொழுது நாம் பார்க்க இருக்கும் பகுதி உலகளவில் புகழ் பெற்ற சங்க இலக்கியத்தில் இடம்பெற்ற பகுதி என்று சொன்னால் அது மிகையாகாது.இந்நேரம் உங்களுக்கே தெரிந்து இருக்கும் அது  பூம்புகார் கடற்கரை தான் என்று. ஆம் இம்முறை நாம் விவாதிக்க இருப்பது பூம்புகார் நகரில் மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டு இருக்கும் சீரழிவுகளைப் பற்றித்தான்.

உண்மையான பூம்புகார் நகரம் நாகை மாவட்டத்தை ஒட்டியுள்ள கடற்கரை பகுதிகளில் கடலுக்கு அடியில் இருப்பதாக நம்பப் படுகிறது.அக்காலத்தே காவிரி ஆறு கடலில் கலக்கும் இடத்தில் அமைந்து இருந்ததால் இப்பகுதி காவிரிபூம்பட்டினம் ,புகார், பூம்புகார் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வந்தது.கல்வி,வீரம்,வணிகம்,கலை,பண்பாடு உள்ளிட்ட  பல்வேறு கூறுகளில் சிறந்து விளங்கிய நகரமாக இது இருந்ததாக சங்க இலக்கியங்களில்  குறிப்பிடப்பட்டு உள்ளது.இந்நகரம் அக்காலத்தில் சோழநாட்டின் துறைமுகமாக விளங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்த நகரம் இப்பொழுது கடலில் முழ்கி இருப்பதாக அறியப்பட்டாலும் 1997ல் பூம்புகார் கடலடி அருங்காட்சியகம் என்று ஆரம்பிக்கப்பட்டது.இந்தியாவில் இருக்கும் ஒரே கடலடி அருங்காட்சியகம் இதுதான் என்ற பெருமை இதற்கு உண்டு.பூம்புகார் நகரின் பெருமையை வெளிக்கொணர கடலுக்கு அடியில் சென்று ஆய்வுகள் மேற்கொள்ள பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்ட பொழுதும் மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் ஒத்துழைப்பு மற்றும் போதிய நிதி  கிடைக்காததால் அவை அனைத்தும் கைவிடப்பட்டது.

பூம்புகார் என்ற மிகப்பெரிய நகரம் கடலுக்கடியில் எங்கு மூழ்கி உள்ளது என்பதில் பல்வேறு முரண்பாடான கருத்துக்கள் நிலவி வந்தாலும்.பூம்புகார் என்ற ஒரு நகரம் பண்டையகாலத்தில் இருந்தது என்பதனை உலகுக்கு பறைசாற்றும் வகையிலும் சான்றாகவும் இருப்பது தான் தற்போது  பூம்புகார் என்ற பெயரில் இருக்கும் இந்த நகரம்.ஆனால் இந்த நகரின் தற்போதைய நிலை என்ன ? கடற்கரைக்கு செல்லும் பகுதிகள் எங்கும் குப்பைகள் நிறைந்து காணப்படுகின்றன அனைத்தும் மக்காத பிளாஸ்டிக் குப்பைகள்.பூங்கா என்று ஒன்று உண்டு அங்கே எங்கு நோக்கினும் மது பாட்டில்களும் மனித கழிவுகளும் நிறைந்து காணப்படுகின்றன.பூங்காவில் அதிகமாக இருக்கும் செடி எது தெரியுமா சீமைக் கருவேல மரங்கள்தான் .அங்கு இருக்கும் இருக்கைகளில் எல்லாம் இருவர் இருவராக அமர்ந்திருக்கிறார்கள் பொது இடம் என்ற நாகரீகமும் பண்பாடும் அவர்களிடம் துளியுமில்லை அவர்களை பார்த்தால் காதலர்களை போலவும் தெரியவில்லை இன்னுமும் எழுதுவேன் ஆனால் நான் அவர்களிடம் இல்லை என்று கூறிய அதே நாகரீகம் மற்றும் பண்பாடு கருதி இன்னும் எழுதுவதை தவிர்த்துக் கொள்கிறேன்.



 உலகெங்கிளும் இருந்து இங்கு சுற்றுலா பயணிகள் வருகைப்  புரிகிறார்கள் அவர்கள் இந்த அவலத்தை பார்த்தால் நம் நாட்டை பற்றி என்ன நினைப்பார்கள் .நீங்கள் மேலே பார்க்கும் இடம் புகைப்படத்தில் ஓரளவுக்கு அழகாக தெரியலாம் ஆனால் நேரில் அப்படி இருக்காது இதன் அருகே சென்றவுடன்.சிறுநீரின் நாற்றம் உங்கள் மூக்கை துளைக்கும் அந்த படத்தில் உள்ள கட்டிடத்திற்கு அருகில் இருக்கும் அந்த கிணறு போன்ற அமைப்பு மிக அழகாக வடிவமைக்கப்பட்டு உள்ளது ஆனால் அதனுள் நீர் இல்லை இருப்பது மனித நிறுநீர் மட்டும்தான் அதையும் தாண்டி ஏகப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகள்,மதுபாட்டில்கள் என அதனை புகைப்படம் எடுக்க கூட எனக்கு மனம் வரவில்லை.

இதோ தற்போதைய பூம்புகார் நகரில் நான் கண்ட ஒரு சில அவலங்களின் புகைப்படங்கள்.





பூம்புகார் பூங்கா



நான் எடுத்த புகைப்படங்களில் இன்னும் சில காட்சிகளும் பதிவாகியிருந்தன நாகரீகம் கருதி அவற்றை எல்லாம் நான் பதிவேற்றம் செய்யவில்லை.

பல கோடி ரூபாய் செலவு செய்து அரும்பாடுபட்டு உருவாக்கிய நகரம் இப்படி சிதலமடைந்து காணப்படுவதற்கு காரணம் என்ன அரசியல் போட்டியா ? .பழைய பூம்புகார் நகரம் கடலில் மூழ்கியது இந்த புதிய பூம்புகார் நகரம் குப்பைகளில் மூழ்கும் அபாயத்தில் உள்ளது.இது தான் தற்போதைய பூம்புகார் நகரின் உண்மையான நிலை.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...