தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

புதுச்சேரி 515 ஊழியர்களின் பணிநியமன ஆணை ரத்து

புதுச்சேரியில் அரசு சார்பு நிறுவனமாக இயங்கிவரும் பாப்ஸ்கோ நிறுவனத்தில் கடந்த என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் 515 தினக்கூலி ஊழியர்களை  பல் நோக்கு ஊழியர்களாக ( Multi Tasking Staff ) பனி நிரந்தரம் செய்து அதற்கான ஆணை அப்போதைய முதல்வர் என்.ரங்கசாமியின் அரசால் வெளியிடப்பட்டது .நிதி நிலைமை சரியாக இல்லாததால் அவர்களுக்கு 13 மாதங்களாக சம்பளம் வழங்கப்பட வில்லை அதனை எதிர்த்தும்  தங்களுக்கு வழங்க வேண்டிய 13 மாத ஊதியத்தை உடனே வழங்க வலியுறுத்தியும் அந்த 515 ஊழியர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் கடந்த ஆட்சியில் 515 தினக்கூலி ஊழியர்களை பனி நிரந்தரம் செய்து வெளியிட்ட ஆணை ரத்து செய்யப்  படுவதாக  மேலாண்மை இயக்குனர் எஸ்.வசந்தகுமார் இன்று உத்தரவு பிறப்பித்து உள்ளார் .இச்  சம்பவம் புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...