புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் குழாய் மூலம் சமையல் எரிவாயு விநியோகிக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.இந்த தகவலை செய்தியாளர்கள் சந்திப்பின் பொழுது புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று அறிவித்தார் மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில் வெளி நாட்டில் வசிப்பவர்கள் புதுச்சேரியில் தொழில் தொடங்க பல்வேறு சலுகைகள் அடங்கிய அரசானையும் வெளியிடப்பட்டுள்ளதாக கூறினார்.
உலக சுகாதார அமைப்பின் ஒரு அறிக்கையில் இந்தியாவில் சமையலுக்கு பயன்படுத்தும் முறையற்ற எரிப்பொருட்களின் மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 5 லட்சம் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.அதன் பின் பிரதம மந்திரியின் சமையல் எரிவாயு திட்டம் கொண்டுவரப்பட்டு நாட்டில் உள்ள அனைவருக்கும் சமையல் எரிவாயு என்பதை அத்தியாவசிய சேவையாக வழங்கப்பட வேண்டும் என்பதனை உறுதிப்படுத்தியது.
அதன் பின் குழாய்கள் மூலம் பல நகரங்களை இணைத்து அதன் மூலம் சமையல் எரிவாயு விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டு முதல் கட்டமாக ஒரு சில நகரங்களில் வழங்கப்பட்டு வந்தது.அதன் பின் அந்த திட்டம் பல கட்டமாக நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு விரிவுப் படுத்தப்பட்டது அந்தவகையில் தற்பொழுது புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் குழாய் மூலம் சமயல் எரிவாயு விநியோகிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.
இந்த திட்டம் தற்போதைக்கு நல்லதொரு திட்டம்போல தோன்றினாலும் இதில் இருக்கும் நன்மை தீமைகள் குறித்து போக போகத்தான் தெரிய வரும் அதுமட்டுமல்லாமல் ஹைட்ரொ கார்பன் திட்ட அறிவிப்புக்கு பிறகு தமிழகம் மற்றும் புதுச்சேயில் நிலவி வரும் சூழ்நிலைகளை கணக்கில் கொண்டு பார்த்தால் நிலத்துக்கு அடியில் குழாய்களை பதிக்க முடியுமா என்பதே சந்தேகம் தான்.

0 comments:
கருத்துரையிடுக