தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

புதுவையிலிருந்து சென்னைக்கு சுற்றுலா சொகுசு கப்பல் -முதல்வர் நாராயணசாமி ஆலோசனை.

தென் மாநிலத்துக்கு பொருட்களை ஏற்றி வரும் சரக்கு கப்பல்கள் சென்னை துறைமுகத்தில் அதிக அளவில் வந்து குவிவதால் சென்னை துறைமுகத்தில் கப்பல்களுக்கு இடையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் சரக்குகளை இறக்க 15 நாட்களுக்கு மேல் காலதாமதம் ஏற்படுகிறது.அதன் பிறகு அங்கிருந்து அந்த சரக்குகள் தென்னகத்தில் உள்ள பிற மாநிலங்களுக்கும் எடுத்து செல்லப்பட வேண்டும்.

சென்னை துறைமுகத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலையும் காலதாமத்தையும் குறைக்க புதுச்சேரி துறைமுகத்தை சென்னை துறைமுகத்தின் துணை துறைமுகமாக அங்கீகரித்து இருக்கிறார்கள் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று டில்லியில் மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் கையெழுத்தாகிறது அதற்காக டில்லி செல்ல உள்ளதாக சென்னை விமான நிலையத்தில் ஊடகங்களுக்கு பேட்டி வழங்கியிருக்கிறார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி.

மேலும் அவர் செய்தியாளர்களிடம் தொடர்ந்து பேசுகையில் சென்னை - புதுச்சேரிக்கு இடையே சுற்றுலா பயணிகள்  சொகுசு கப்பலை இயக்க ஆலோசித்து வருவதாகவும் அதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...