தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

புதுச்சேரி கடற்கரையில் சோலார் பேனல் சாலைகள் - முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

புதுவை மாநில முதல்வர் நாராயணசாமி இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பின் பொழுது புதுச்சேரி மாநிலத்தில் மின் தேவையின் அதிகரிப்பால் வருங்காலத்தில் மின் பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்க மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து மத்திய தொகுப்பில் இருந்து கூடுதலாக 100 மெகாவாட் மின்சாரம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம்.அதனையடுத்து ஒரிசா மாநிலத்தில்  உள்ள தளபேரா அனல் மின் நிலையித்தில் இருந்து குறைந்த விலைக்கு 100 மெகாவாட் மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தார்.இதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது.

மேலும் புதுச்சேரியில் மின் சக்தி ஆற்றலை அதிகரிப்பது குறித்து அவர் தொடர்ந்து பேசுகையில் இந்தியாவில் முதல் முறையாக ஜெர்மன் நாட்டில் உள்ளது போல புதுச்சேரி கடற்கரை சாலை முழுவதும் என்.எல்.சி மூலம் சோலார் பேனல்கள் அமைத்து மின் உற்பத்தி துவங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் இதை முழுவதுமாக செய்து தருவதற்கு என்.எல்.சி நிர்வாகம் முன்வந்துள்ளதாகவும் முன்னோடி திட்டமாக 2 மெகா வாட் மின்சாரம் இதன் மூலம் தயாரிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் கூறியிருக்கிறார்.

முதல்வரின் இந்த அறிவிப்பால் கூடிய விரைவில் புதுச்சேரி கடற்கரை சாலைகள் மின் உற்பத்தி செய்யும் சோலார் பேனல் சாலைகளாக மாறுமா என்பதனை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.ஆனால் மேற்குறிய திட்டங்கள் எல்லாம் சரிவர நடக்கும் பட்சத்தில் இன்னும் சில ஆண்டுகளில் புதுவை மாநிலம் மின் மிகை மாநிலமாக உருவெடுக்கும் என்பதில் மாற்றுக்கருத்தே கிடையாது.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...