தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

காவிரியில் 2000 கன அடி தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழகத்தில் வறட்சி தலைவிரித்து ஆடி வரும் நிலையில் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 2000 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது.மேலும் காவிரி நீர் பங்கீடு வழக்கு விசரணையை ஜூலை 11 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு வழங்குவதும் கர்நாடக அரசு அதை எதிர்ப்பதும் தொடர்கதையாகி விட்டது.உச்சநீதி மன்ற தீர்ப்பு என்னவோ தற்காலிகமாக தமிழகத்துக்கு சாதகமாக வந்திருக்கிறது ஆனால் காவிரி நீர் தமிழகத்தின் கடைமடை பகுதிகளுக்கு வருமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

முன்னதாக கடந்த 2007ஆம் ஆண்டு காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சனை குறித்து நடுவர்  மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது.இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு வந்தபோது இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...