தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

ஹைட்ரொ கார்பன் திட்டத்தின் ஆய்வு மற்றும் உரிம கொள்கை -காத்திருக்கும் ஆபத்துக்கள்

மத்திய அரசின் பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் கடந்த ஆண்டு மார்ச் 30ல் ஹைட்ரொ கார்பன் திட்டங்களுக்காக புதிய ஆய்வு கொள்கையை அறிவித்தது அதனை ஹைட்ரொகார்பன் ஆய்வு மற்றும் உரிம (Hydrocarbon exploration and Licensing Policy) கொள்கை என வெளியிட்டது.அந்த கொள்கையின் அடிப்படையில் உரிமம் பெற்றவர்கள் எதை எங்கு எப்படி எடுக்கலாம் என்பதை அதில் இருக்கும் கொள்கைகளின் படி பார்ப்போம்.

இதோ அந்த Hydrocarbon exploration and Licensing Policy இங்கே இணைக்கிறேன்.http://www.petroleum.nic.in/docs/HELP.pdf

இந்த கொள்கையின் முதல் விஷயமே (Uniform Licensing ) ஒன்றிணைந்த உரிமம்.அதாவது உரிமம் பெற்ற தனியார் நிறுவனங்கள் எண்ணெய்,இயற்கை எரிவாயு ,நிலக்கரி ,மீத்தேன்,ஏத்தேன்,பியூட்டேன்  போன்ற எந்த ஒரு வாயுவை வேண்டுமானாலும் பூமிக்கு அடியில் இருந்து எடுத்துக்கொள்லாம் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக உரிமம் பெற வேண்டிய அவசியம் இல்லை.

அந்த கொள்கையில் Single License for Conventional and non -Conventional Hydrocarbons என்ற வாக்கியத்தை படித்திருப்பீர்கள் அதன்படி மேல்கண்ட இயற்கை எரிவாயுக்களையும் எண்ணெய்களையும் பூமிக்கு அடியில் இருந்து எடுக்க வழக்கமான (Conventional) அல்லது வழக்கத்தில் அல்லாத (non -Conventional) முறையையும் பயன்படுத்தலாம்.இதில் வழக்கத்தில் அல்லாத முறை என்பதில் FRACKING முறையும் அடங்கும் அதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள https://en.wikipedia.org/wiki/Hydraulic_fracturingநேரம் கிடைக்கும் பொழுது நான் அதை தமிழிலும் மொழிப் பெயர்த்து பதிவிடுகிறேன்.பூமிக்கு அடியில் பல்லாயிரம் அடிக்கு கீழே துளையிட்டு நிலத்தடி நீரினை வெளியேற்றி அதன் பின் ரேடியோ ஆக்டிவ் கனிமங்களை பயன்படுத்தி மீத்தேன் போன்ற இயற்கை எரிவாயுக்கள் எடுக்கப்படுகிறது.இது மிகவும் ஆபத்தானது.இதைப்போன்ற முறையை பயன்படுத்தவும் உரிமம் பெற்ற நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியிருக்கிறது மத்திய அரசு.

அடுத்து Open Acreages Licensing Policy இதன்படி எந்த இடத்தில் வேண்டுமானாலும் இந்த வாயுக்கள் மற்றும் எண்ணெய்களை எடுக்க உரிமம் பெற்ற நிறுவனங்கள் மத்திய அரசிடம் விண்ணப்பிக்கலாம்.இது நெடுவாசலிலோ காரைக்காலிலோ அல்ல அவர்கள் நிலப்பரப்பின் அளவை அதிகரித்துக்கொண்டே செல்வார்கள் .அதற்கான அனுமதியையும் மத்திய அரசு அந்த உரிமம் பெற்ற நிறுவனங்களுக்கு வழங்கியிருக்கிறது.

இப்படி அந்த கொள்கைகளில் இடம்பெற்று இருக்கும் அணைத்து விஷயங்களுமே விவசாயத்துக்கும் அப்பகுதியில் வாழும் மக்களுக்கும்  எதிராகவே உள்ளது.முதலில் மத்திய அரசின் இந்த ஆய்வு  கொள்கையிலேயே மாற்றம் கொண்டுவர வேண்டும்.இந்த கொள்கைகளை முழுவதுமாக படித்த பின்பு இதனால் மக்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்று யாராலும் உறுதியாக கூற முடியாது.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...