தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

தமிழகம் மற்றும் புதுச்சேரியின் மார்ச் மாத வெப்பநிலை குறித்த தகவல்கள்

12-03-2017 நாளை முதல் காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் இனி வறண்ட வானிலையே நிலவும்.14-03-2017,15-03-2017 மற்றும் 16-03-2017 அன்று சில இடங்களில் வானம் மேகமூட்டதுடன் காணப்படும் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கும் வாய்ப்புண்டு அதை தவிர குறிப்பிட்டு சொல்லும்படியாக வாய்ப்புகள் எதுவும் இல்லை.16-03-2017 பிறகு நாகப்பட்டினம் மாவட்டத்தில் மழைக்கான வாய்ப்பு இந்த மாதத்தில் எதுவும் கிடையாது.

12-03-2017 நாளை முதல் தமிழக மேற்கு மாவட்டங்களில் இனி மழை குறையும்.நாளை தேனி மாவட்டத்திலும் திருச்சி மாவட்டத்தில் ஒரு சில இடங்களிலும் மழையை எதிர்பார்க்கலாம்.14-03-2017 தமிழக மேற்கு மாவட்டங்களில் கணிசமான அளவு மழைக்கு வாய்ப்புண்டு.


முன்பே பதிவிட்டு இருந்தது போல மார்ச் 15ஆம் தேத்திக்கு பிறகு குறிப்பாக 17-03-2017க்கு பிறகு திருச்சி ,திருவண்ணாமலை,வேலூர்,பெரம்பலூர்,சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்க தொடங்கும்.இன்னும் சில தினங்களிலேயே திருச்சியின் வெப்பநிலை 100 °F தாண்டிவிடும்.


20-03-2017க்கு பிறகு காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் வெப்பம் மல மலவென உயரும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் மார்ச் இறுதி வாரத்தில் காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் 100 ° F க்கும் அதிகமான அளவு  வெப்பம் நிலவும்.

மார்ச் இறுதி வாரத்தில் தமிழக வட கடலோர மாவட்டங்கள் மற்றும் மத்திய மாவட்டங்களில் வெயிலின் அளவு மிகவும் கடுமையாக இருக்கும். 

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...