தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

மார்ச் 15க்கு பிறகு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பம் அதிகரிக்கும்

இந்த ஆண்டு நாடு முழுவதும் சராசரி அளவை விட வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னரே தெரிவித்து இருந்தது.தற்பொழுது இருக்கும் சூழ்நிலைகளை கொண்டு பார்த்தால் (15-03-2017) 2017 மார்ச் 15ஆம் தேதிக்கு பிறகு திருச்சி ,வேலூர்,தஞ்சாவூர்,திருவண்ணாமலை மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்க தொடங்கும் என தெரிகிறது.மார்ச் 20ஆம் தேதிக்கு பிறகு காரைக்கால் ,புதுச்சேரி,நாகப்பட்டினம் ,கடலூர்,சென்னை ,விழுப்புரம் போன்ற வட கடலோர மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்க தொடங்கும்.

2017 மார்ச் மாதம் முழுவதும் கேரளாவில் ஓர் அளவுக்கு மிதமான வெப்பநிலையே நிலவும் அனால் கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் அங்கேயே கொஞ்சம் வெப்பநிலை கூடி தான் இருக்கும் அதனால் கேரளாவை ஒட்டியுள்ள கோயம்பத்தூர்,நீலகிரி,தேணி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரளவுக்கு சராசரியான வெப்பநிலை நிலவ வாய்ப்பு உள்ளது.


காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களை பொறுத்தவரையில் மார்ச் 25ஆம் தேதிக்கு பிறகு வெப்பம் கொளுத்தும் என்பதில் மாற்றுக்கருத்தே கிடையாது தமிழகத்தின் அனைத்து வட மாவட்டடங்களிலும் இதே நிலை தான் இருக்கும்.

கேரளாவுக்கு இந்த மாதம் சுற்றுலா செல்பவர்கள் தாராளமாக செல்லலாம்.

காரைக்கால் மற்றும் நாகப்பட்டினத்தில் இந்த வாரம் அதாவது மார்ச் 10ஆம் தேதி வரை மிதமான வெப்பநிலையே நிலவும் அடிக்கடி வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் சில நேரங்களில் மழைக்கும் வாய்ப்புண்டு..


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...