தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் மாத வானிலை குறித்த தகவல்கள்

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் மார்ச் மாதம் இறுதி வாரத்தில் வெப்பம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.குறிப்பாக தமிழக உள் மாவட்டங்களில்  பகல் நேர வெப்ப நிலையானது கடுமையாக  உயர்ந்துள்ளது.இது ஏப்ரல் மாதத்திலும் தொடரும். தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களை பொறுத்தவரையில் தமிழக உள் மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் பகல் நேர வெப்பநிலையில் அளவு சற்று குறைந்து தான் காணப்படுகிறது.29-03-2017 க்கு பிறகு தமிழக தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புண்டு ஆனால் பெரிய அளவிலான மழைக்கு வாய்ப்பில்லை.ஏப்ரல் முதல் வாரத்திலும் அவ்வப்பொழுது தமிழக தென்கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புண்டு.

காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களை பொருத்தவரையில் இந்தியப்பெருங்கடலில் ஏற்பட்டு இருக்கும் மாற்றத்தால் மார்ச் இறுதியிலும் ஏப்ரல் முதல் வாரத்திலும் மழைக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு அதே சமயம் 08-04-2017க்கு பிறகு தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பெரும்பாலான கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புண்டு.காரைக்கால் மற்றும் நாகப்பட்டினத்திலும் மழையை எதிர்பார்க்கலாம்.

கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள தமிழக மேற்கு மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளை பொருத்தவரையில் ஏப்ரல் மாதத்தில் மிதமான வெப்பநிலையே நிலவும் ஆனாலும் பகல் நேர வெப்பநிலை சற்று உயர்ந்தே காணப்படும்.

15-04-2017 ஏப்ரல் மாதம் 15ஆம் தேதிக்கு பிறகு தமிழக உள் மாவட்டங்களில் தற்பொழுது நிலவி வரும் வெப்பநிலையைக் காட்டிலும் வெப்பம் அதிகரிக்கக் கூடும்.

தமிழகத்துடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதம் கேரள மாநிலத்தில் வெப்பம் குறைவாக இருக்கும் ஆனால் கடந்த சில ஆண்டுகளில் நிலவிய அம்மாநில வெப்பநிலையுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கேரளாவிலும் வெப்பம் சற்று அதிகமாக தான் இருக்கும்.

இன்று 27-03-2017 காலை 8:30 மணிக்கு பதிவான அளவின்படி கடந்த 24 மணி நேரத்தில் கரூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 104°F பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது இதற்கு அடுத்த படியாக திருப்பத்தூரில் 103.64°F பாரன்ஹீட்டும் சேலத்தில் 103.1°F வெப்பமும் பதிவாகியுள்ளது.வேலூர் ,பாளையம்கோட்டை மற்றும் தருமபுரி போன்ற மாவட்டங்களிலும் அதிக பட்ச வெப்பநிலை 100°F பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது.மதுரை மற்றும் திருச்சி மாவட்டத்தில் 99.86°F பாரன்ஹீட்வெப்பம் பதிவானது.

வானிலை குறித்த மேலும் பல தகவல்களுடன் மீண்டும் பதிவிடுகிறேன்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...