தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி புதுப்பொலிவு பெற்றுவரும் திருநள்ளாறு

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உள்ள ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோவில் சனிப்பெயர்ச்சி விழாவானது இந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற இருக்கிறது.கடந்த முறை சனிப்பெயர்ச்சிக்கு சில மாதங்களுக்கு முன்பிலிருந்தே ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பல லட்சம் பக்தர்கள் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோவிலை நோக்கி படையெடுத்தனர் இந்த நிலை சனிப்பெயர்ச்சி முடிந்து  அடுத்த சில மாதங்கள் வரை தொடர்ந்தது.சனிப்பெயர்ச்சி அன்று கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் இந்தியாவின் முக்கிய அரசியல் பிரபலங்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் சில மாதங்களுக்கு முன்பே வந்து ஸ்ரீ தர்பாரண்யேசுவரரை தரிசித்து செல்வர்.

இந்த ஆண்டும் சனிப்பெயர்ச்சிக்கு சில நாட்களுக்கு முன்பே திருநள்ளாரில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதால் பக்தர்களின் வசதிக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அமைச்சர் திரு ஆர்.கமலக்கண்ணன் அவர்களால் தொடக்கி வைக்கப்பட்ட இக்கட்டிட பணிகளின் தற்போதைய நிலை குறித்து கோயில் நிர்வாகத்தினர் ஊடகங்களுக்கு தெரிவிக்கும் பொழுது அனைத்து பணிகளும் அடுத்த மூன்று மாதங்களுக்குள் விரைந்து முடிக்கும் வகையில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்து உள்ளனர்.

அரசு சீமைக்கருவேல மரங்களை முனைப்புடன் அகற்றி வரும் இவ்வேளையில் இந்த கட்டிட பணிகள் எல்லாம் நிறைவு பெரும் பொழுது திருநள்ளாறு நகரம் புதுப்பொலிவுடன் திகழும் என்று அப்பகுதி மக்கள் சந்தோஷமாக தெரிவித்து வருகின்றனர்.

திருநள்ளாறில் கடந்த சனிப்பெயர்ச்சியின் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதோ உங்களுக்காக







பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...