தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

' உல்பேஷியா ' (Wolbachia) என்றால் என்ன ?

உல்பேஷியா (Wolbachia)  இந்த வார்த்தை கேட்டவுடன் இவன் என்னடா இல் தக்க சையா மாதிரி ஒரு புது வார்த்தையை உளறுகிறானே என்ற எண்ணம் உங்களுக்கு தோன்றலாம்.ஆனால் ' உல்பேஷியா' என்ற வார்த்தை இன்னும் சில ஆண்டுகளுக்கு பிறகு உங்களுக்கு மிகவும் பரிச்சயமான வார்த்தையாக மாறலாம்.சரி அப்படீன்னா அது என்னானு சீக்கிரம் செல்லப்பா ? என்கிறீர்களா.சொல்கிறேன் கேளுங்கள் 'உல்பேஷியா' என்பது ஒரு வகையான பாக்டீரியாவின் பெயர் பயன்படுத்துவது குறித்து இந்தியாவில் பெரிய ஆராய்ச்சியே நடைபெற்று வருகிறதாம் அதுவும் குறிப்பாக புதுச்சேரியில்.

புதுச்சேரியில் அப்படி என்ன ஆராய்ச்சி நடந்துவருகிறது?
கொசுக்களால் அதிகமாக பரவும் நோய்களான டெங்கு ,சிக்கன் குனியா,சிகா போன்ற நோய்கள் ஏடிசு என்கிற எகிப்திய கொசுக்களால் தான் பரவுகிறது.புதுச்சேரியில் உள்ள ஆராய்ச்சி குடத்தில் இந்த கொசுக்கள் மூலம் பரவும் வைரஸை கட்டுப்படுத்த (ICMR ) இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆஸ்திரேலிய நாட்டின் மொனாஸ் பழ்கலைக்கழகத்துடன் இணைத்து முதல் கட்ட ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது.

'உல்பேஷியா ' (Wolbachia) அப்படி என்னதான் செய்யும் ? 
உல்பேஷியா என்ற இந்த பாக்டீரியாவை டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிசு கொசுக்களுக்கு செலுத்திவிடுவார்கள் அப்படி அந்த உல்பேஷியா பாக்டீரியா செலுத்தப்பட்டு இருக்கும் ஏடிசு கொசுவால் டெங்கு காய்ச்சலை பரப்ப முடியாது.அது எப்படி என்கிறீர்களா ? இதோ அதற்கு விடை இந்த பாக்டீரியா செலுத்தப்பட்ட ஏடிசு கொசு முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் பொழுது அதில் இருந்து வெளிவரும் கொசுக்களால் டெங்குவை பரப்ப இயலாது.அதே சமயம் இந்த உல்பேஷியா பாக்டீரியா செலுத்தப்பட்டு இருக்கும் ஆண் ஏடிசு கொசு பெண் ஏடிசு கொசுவுடன் இணை சேரும்பொழுது பெண் கொசுவால் உருவாக்கப்பட்டும் முட்டைகள் பொறுக்காது இதனால் ஏடிசு கொசுக்களின் இனப்பெருக்கமும் கட்டுப்படும்.


'உல்பேஷியா ' (Wolbachia) பாக்டீரியா எங்கு இருக்கிறது ? 
நம் நாடான இந்தியாவில் உல்பேஷியா பாக்டீரியா இருக்கிறது ஆனால் அவைகளுக்கு டெங்குவை கட்டுப்படுத்தும் ஆற்றல் இல்லை என கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.அதனால் ஆஸ்தரேலியாவில் இருந்து பாக்டீரியாக்களை இந்தியாவுக்கு இறக்குமதி செய்து ஆராய்ச்சியில் ஈடுபட உள்ளனர்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...