தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

'வேர்ல்டு ஹாப்பினஸ் ரிபோர்ட் ' இந்தியாவுக்கு பின்னடைவு

உலகின் உள்ள 155 நாடுகளில் எந்த நாட்டின் அரசாங்கம் தங்கள் நாட்டு மக்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முனைப்பு காட்டுகிறது என்பதையும் எந்த நாட்டின் மக்கள் தங்கள் அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் அதிக விகித அடிப்படையில் திருப்தி அடைந்துள்ளார்கள் என்பதையும் அளவுகோலாக கொண்டு ஒவ்வொரு ஆண்டும் சிறந்த நாடுகளை பட்டியலிட்டு வெளியிடப்படும் அறிக்கை தான் 'வேர்ல்டு ஹாப்பினஸ் ரிபோர்ட் ' என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் உலக மகிழ்ச்சி அறிக்கை.மக்களின் ஆரோக்கியம்,வாழ்வாதாரம்,அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை என்று அனைத்திலும் மக்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் நாடு எது என்று கணக்கிடப்பட்டு ஆண்டுதோறும் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது.

 அதன் அடிப்படையில் இந்த ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.118வது இடத்தில் இருந்து 122வது இடத்திற்கு பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது .இதில் வேடிக்கை என்னவென்றால் பாகிஸ்தான் நாட்டுக்கு  80வது இடமும் நேபாளத்துக்கு  99வது இடமும் இலங்கைக்கு 110வது இடமும் இந்த பட்டியலில் வழங்கப்பட்டு உள்ளது.இதில் என்ன வேடிக்கை இருக்கிறது என்கிறீர்களா ? நாடு முன்னேறி செல்கிறது வளர்ச்சியடைகிறது ,ஒளிர்கிறது என்று விளம்பரம் செய்யும் நாட்டில் மக்கள் சந்தூஷமாக இல்லை என்பதும் ஜனநாயக நாட்டில் மக்கள் கருத்துக்கு மதிப்பு இல்லை என்பதும் வேடிக்கை இல்லையா ? வேதனை தரக்கூடிய செய்தி இல்லையா ? சரி போகட்டும் புலம்பி என்ன செய்ய ராணுவ ஆட்சி நடக்கும் சில நாடுகளில் கூட நம் நாட்டை விட மக்கள் விகித அடிப்படையில் மகிழ்ச்சியாக வாழ்கின்றனராம்.சரி நமது சோகத்தை புறம் தள்ளிவிட்டு பட்டியலுக்கு வருவோம்.

இதோ அந்த முழு அறிக்கையை இங்கே இணைக்கிறேன்

வேர்ல்டு ஹாப்பினஸ் ரிபோர்ட்


 'வேர்ல்டு ஹாப்பினஸ் ரிபோர்ட் '  முதல் பத்து இடத்தைப்  பிடித்த நாடுகள்


  1. நார்வே 
  2. டென்மார்க் 
  3. ஐஸ்லாந்து 
  4. சுவிட்சர்லாந்து 
  5. பின்லாந்து 
  6. நெதர்லாந்து 
  7. கனடா 
  8. நியூஸிலாந்து 
  9. ஆஸ்திரேலிய 
  10. சுவீடன்
இந்த பட்டியலில் அமெரிக்காவுக்கு 14வது இடமும் சீனாவுக்கு 79வது இடமும் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...