தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

07-05-2017 காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் இரத்ததான முகாம்

நம் பிறப்புக்கு வித்திட்டு இன்று நாம் பூமியில் ஒரு மனிதனாக உயிர் வாழ உதவிய தாயையும் தந்தையையும் தெய்வத்துக்கு சமமாக என்னும் ஆரோக்கியமாக சிந்தனையுடைய சமூகத்தில் தான் நாம் வாழ்ந்து  கொண்டிருக்கிறோம்.உயிரற்ற ஒரு உடலுக்கு உயிர் தானம்  செய்வது என்பது சாத்தியமற்றது ஆனால் இரத்த தானம் செய்வதன் மூலம் நம்மால் உயிர் வாழ போரடிக் கொண்டிருக்கும் சிலரை மரணப்பிடியில் இருந்து மீட்க உதவ முடியும்.

இரத்ததானம் இதை குருதிக்கொடை என்றும்  தமிழில் கூறலாம்.உடலில் உள்ள ஒவ்வொரு இரத்த அணுவும் மூன்று மாத காலத்தில் தாமாகவே அழிந்து மீண்டும் உற்பத்தியாகின்றன.ஒரு ஆரோக்கியமான மனிதனில் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது அதாவது 5000 முதல் 6000 மில்லிலிட்டர் அதில் வெறும் 200 முதல் 300 மில்லிலிட்டர் அளவு இரத்தத்தை நாம் தானம் செய்தாலே  போதும் பூமியில் ஒரு உயிர் பிழைத்து வாழ நாமும் காரணமாக இருப்போம் அதுமட்டுமல்லாமல் நாம் சாப்பிடும் சாதாரண உணவுகளின் மூலம் இரண்டே வாரத்தில் நாம் இரத்த தானம் செய்த  அளவு இரத்தம் நம் உடலில் தாமாகவே உற்பத்தியாகிவிடும்.ஒரு யூனிட் ரத்தம் என்பது 350 மில்லிலிட்டர் சமீபத்திய ஆய்வின் படி நம் நாட்டில் ஒரு ஆண்டுக்கும் 40 கோடி யூனிட் இரத்தம் தேவைப்படுகிறது ஆனால் கிடைப்பது என்னவோ 40 லட்சம் யூனிட் தான் அதாவது 39 கோடியே 60 லட்சம் யூனிட் பற்றாக்குறையாக இரத்தம் கிடைக்கப்பெறுவதால் உயிர் வாழ வாய்ப்பு இருந்தும் பிழைத்து எழ முடியாமல் பூமியை விட்டு பிரிந்து சென்ற உயிர்கள் ஏராளம் என்றே கூறலாம்.நம் நாட்டின் மக்கள் தொகை எவ்வளவு தெரியுமா ? ஜூலை மாதம் 2016ஆம்  ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி 1,326,801,576  அதாவது திட்டத்திட்ட 133 கோடி.நம் மக்கள் அனைவரும் சேர்ந்து முயன்றால் சிகிச்சைகளின் பொது ஏற்படும் இந்த இரத்தப் பற்றாக்குறையை  இல்லாமலேயே  செய்துவிட முடியும்.ஒரு மனிதன் 3 மாதங்களுக்கு ஒருமுறை தாராளமாக இரத்ததானம் செய்யலாம்.அதிக மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் இரத்தப் பற்றாக்குறையால் ஏற்படும் உயிரிழப்புகள் என்பது இரத்ததானம் குறித்த போதிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லாததையே காட்டுகிறது.

 செய்தி : வருகின்ற 07-05-2017 அன்று காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் இரத்ததான முகாம் நடைபெற உள்ளது.காரை சாமானியன் குரல் வாட்ஸ்ஆப் குழு மற்றும் காரைக்கால் அரசு பொது மருத்துவமனை இணைத்து நடத்தும் இந்த இரத்ததான முகாமில்  இளைஞர்கள்,சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு இரத்ததானம் செய்து இரத்தப் பற்றாக்குறையால் மரணப்பிடியில் சிக்கித் தவிக்கும் உயிர்களைக் காப்பாற்ற உதவுமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் தொடர்புக்கு காரை சாமானியன் வாட்ஸ்ஆப் குழு சார்பில் இரண்டு அலைப்பேசி எண்களும் வழங்கப்பட்டு உள்ளது .இதோ அந்த அலைப்பேசி எண்கள் உங்களின் பார்வைக்கு.

பாயாஷ்  - 8526913088
பக்கர் -8148186348பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...