தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

13-04-2017 வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்

நாம் ஏற்கனவே இதற்கு முந்தைய பதிவில் பதிவிட்டு இருந்தது போல வங்கக்கடலில் அந்தமான் கடல்பகுதிக்கு அருகே 13-04-2017 (இன்று ) வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது.இதை சென்னை வானிலை ஆய்வு மைய தகவல்களும் உறுதிப் படுத்தியுள்ளது.

அந்த முந்தைய பதிவினை பார்க்க - https://goo.gl/enYvkM என்ற முகவரியை சொடுக்கவும்

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்துக்கு மிக அருகில் உருவாகி இருந்தாலும் இதனால் தமிழகத்துக்கு எந்த அளவு மழைக்கான வாய்ப்பு உள்ளது என்பதனை நாம் முன்பே சொன்னது போல இப்பொழுதே உறுதியாக கூறமுடியாது.தற்பொழுது நிலவும் சூழ்நிலைகளே தொடுருமானால் அது சக்தி வாய்ந்த புயலாகவும் மாற வாய்ப்பு உள்ளது.தற்பொழுது நிலவும் தகவல்களை கொண்டு பார்க்கையில் அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட கிழக்கு திசையில் நகரலாம் என எதிர்பார்க்கப் படுகிறது அதாவது மியன்மரை நோக்கி  அப்படியானால் தமிழகத்துக்கு பெரிய அளவிலான மழை கிடைக்க வாய்ப்பில்லை.அதே சமயம் அது திசை மாறி வட மேற்கு திசையில் நகரும் பட்சத்தில் தமிழகத்தில் நல்ல மழைக்கான வாய்ப்பு உண்டு.


மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆனது தமிழகத்தை விட்டு தள்ளி செல்கையில் வெப்பத்தின் அளவு சற்று அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளது .இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட சற்று முன்னரே ஆரம்பமாக வாய்ப்புகள் உள்ளது.வழக்கமாக ஜூன் மாத தொடக்கத்தில் ஆரம்பமாகும் தென்மேற்கு பருவ மழை இந்த ஆண்டு மே மாத இறுதியிலேயே தொடங்க வாய்ப்பு உள்ளது.ஆனால் மழை எந்த அளவுக்கு இருக்கும் என்பதை இன்னும் சில நாட்கள் கழித்து தான் உறுதியாக கூற முடியும்.

வானிலை குறித்த மேலும் பல தகவல்களுடன் மீண்டும் பதிவிடுகிறேன்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...