தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

16-04-2017 மற்றும் 17-04-2017 ஆகிய தேதிகளில் காரைக்கால்,நாகப்பட்டினம் ,புதுச்சேரி,கடலூர் உட்பட தமிழக வட கடலோர மாவட்டங்கள் அனைத்திலும் இயல்பை விட வெப்பம் அதிகமாக இருக்கும்

14-04-2017 இன்று வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது 15-04-2017 நாளை மியன்மரை நோக்கி அதாவது வட கிழக்கு திசையில் நகர ஆரம்பிக்கலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.அவ்வாறு அது தமிழகத்தை விட்டு நகர்ந்து சென்று புயலாக உருவாகும் பட்சத்தில் 16-04-2017 மற்றும் 17-04-2017 ஆகிய தேதிகளில் காரைக்கால்,நாகப்பட்டினம் ,புதுச்சேரி,கடலூர் உட்பட அணைத்து தமிழக வட கடலோர மாவட்டங்களிலும் உள் மாவட்டங்களிலும் வெப்பம் அதிகரிக்க வாய்ப்புகள்  உள்ளது.

16-04-2017 மற்றும் 17-04-2017 ஆகிய தேதிகளில் காரைக்கால் ,நாகப்பட்டினம் ,புதுச்சேரி உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் காலை 11:00 மணி முதல் மாலை 4:00 மணியளவில் இதுவரை நிலவி வந்த வெப்பநிலையைக்  காட்டிலும் 2° முதல் 3° செல்ஸியஸ் வரை கூடுதலாக வெப்பத்தின் அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

16-04-2017 மற்றும் 17-04-2017 தஞ்சை,திருச்சி போன்ற தமிழக உள் மாவட்டங்களில் காலை 11:00 மணி முதல் மாலை 4:00 மணியளவில் இதுவரை நிலவி வந்த வெப்பநிலையை 1° முதல் 2° செல்ஸியஸ் வரை கூடுதலாக வெப்பத்தின் அளவு உயர வாய்ப்புள்ளது.மேலும் வெப்ப சலனம் காரணமாக சில இடங்களில் மழைக்கும் வாய்ப்புண்டு.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...