தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

16-04-2017 தற்சமயம் காரைக்காலில் 97.88° அளவு வெப்பம் பதிவாகியுள்ளது

16-04-2017 வங்கக்கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி மியன்மர் நாடு அருகே கடல் பகுதியில் நிலைக்கொண்டு உள்ளது.அது இன்று நள்ளிரவு அல்லது நாளை காலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.சிலர் இந்த புயல் தமிழகத்தை நோக்கி வந்துகொண்டு இருப்பதாக பொய்யான செய்தி பரப்பி வருகின்றனர் அது முற்றிலும் தவறான தகவல்.இனி அந்த புயலால் தமிழக வட கடலோர மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு என்பது மிகவும் குறைவு,நான் இதற்கு முன்பே கூறியது போல இன்றும் நாளையும் வட கடலோர மாவட்டங்களில் இயல்பை விட வெப்பம் அதிகமாக இருக்கும் வறட்சியான வானிலையே நிலவும்.

தற்சமயம் நண்பகல் 12:30 மணியளவில் காரைக்காலில் 36.6° செல்சியஸ் அதாவது 97.88° ஃபாரன்ஹீட் அளவு வெப்பம் பதிவாகியுள்ளது.நேற்று காரைக்கால் மாவட்டத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை 33.6° செல்சிஸ் நேற்றை விட தற்பொழுது திட்டத்திட்ட 3° செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழகம் முழுவதிலும் அதிக பட்ச வெப்பநிலையானது உயர்ந்து வருகிறது.குறிப்பாக வட கடலோர மாவட்டங்களில் இதுநாள் வரையில் நீடித்து வந்த அதிகபட்ச வெப்பநிலை அளவில் குறிப்பிடத்தக்க அளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது.

வானிலை குறித்த மேலும் பல தகவல்களுடன் மீண்டும் பதிவிடுகிறேன்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...